பள்ளிக்கூடம் 2 - உப்புமூட்டசண்ட

பள்ளிக்கூடம் - இதன் தொடர்ச்சி...
---
வற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட. கொஞ்சம் கட்டுமஸ்தான பசங்க, பொடிப்பசங்கள உப்புமூட்டயா தூக்கிகுவாங்க. நாம எப்பவும் மேலதான். மரத்தடியில் சுற்றி நின்றுகொண்டு ‘ரெடி... ஸ்டார்ட்’ என சொன்னவுடன் ஓடி வந்து ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொள்வோம். அடுத்தவரை இடித்து கீழே விழச்செய்வதுதான் ஒரே குறி. குதிரை கீழே விழுந்தாலோ, உப்பு கீழே விழுந்தாலோ அவுட். அந்த ஜோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரெண்டுமே சேர்ந்து குடைசாயும். இதில் எப்போதும் முக்கியமான நேரம் ஒன்று வரும். அத்ற்காகவே பல பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பர். கடைசியாய் நாலு பேர் இருப்பர். ரெண்டு ரெண்டாக சண்டை நடந்துகொண்டிருக்கும். அதில் ஒரு ரெண்டில் ஒருவன் விழுவான். அதில் ஜெயித்த குதிரை அப்படியே ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்க்கும். சற்று தூரத்தில் அந்த இன்னொரு இரண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்கும். தனியே இருக்கும் இந்தக் குதிரையின் முதுகில் இருப்பவன் காலை 180 டிகிரிக்கு நீட்டி வைத்துக்கொள்வான். அப்படியே தூரத்திலிருந்து ஓ....டி வந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஜோடி மீது ஒரே இடி. இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஓடி வந்தவன் மற்ற இருவரையும் வீழ்த்தலாம், இருவரில் ஒருவரை வீழ்த்தலாம், மூன்று ஜோடியுமே விழலாம் அல்லது ஹீரோ மாதிரி ஓடி வந்தவன் தடுக்கி விழுந்து காமெடி பீஸ் ஆகலாம்.

முடிந்து மதிய வகுப்புக்குச் செல்லும்போது, சட்டை வேறு நிறத்தில் இருக்கும். சில பட்டன்கள் இருக்காது. என் அம்மா அதிகம் பட்டன் வாங்கியது இந்த நேரத்தில்தான். சில நேரங்களில், டௌசர் பட்டன் கூட காணாமல் போய்விடும்.

மாலை கடைசி வகுப்பில் பாடம் பக்கம் மனசே செல்லாது. எப்படா பெல்லடிக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்போம். பெல் அடித்தவுடன், ஓஓஓஓ என் கத்திக்கொண்டே வெளியே ஓடி வருவோம். (ஆனால் உள்ளே செல்லும்போது ஆமை வேகம்தான்). வாசலில் ஒரு பாட்டி, இனிப்புமாவு, மாங்காய், நெல்லிக்காய் எல்லம் ஒரு கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். பிள்ளைங்க எல்லாம் ஈ மொய்ப்பது மாதிரி சுத்திக்குவோம். அந்தப்பக்கம் ஒரு ஆள் , சைக்கிளில் வெள்ளரிக்கய் வைத்திருப்பார். சில நேரங்களில் எலந்தப்பழம், நவாப்பழம் ஆகியவையும் கிடைக்கும். என்னோட ஃபேவரிட் எப்போதுமே மாங்காய்தான், சிறிது உப்புடன்.

பாக்கெட்மணி பத்து பைசாவிலிருந்து, நாலனாவுக்கு மாற வெகு காலம் பிடித்தது. இன்று ஒரு ரூபாய்க்கு விற்கும் கடலை மிட்டாய், அன்று அஞ்சு பைசாவுக்கோ, பத்து பைசாவுக்கோ வாங்கிய ஞாபகம். பெரிய்ய்ய்ய சைஸ் ஆரஞ்சு மிட்டாய் கூட அஞ்சு பைசாதான். காலம் மாற மாற அதோட சைஸ் குறைந்தும், விலை கூடியும் வந்தது நமது பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பித்தது. இதை விட தேன் மிட்டாய் எனக்கு ரொம்ப புடிக்கும். இவற்றை எல்லாம் விட நாங்கள் விரும்பும் மிட்டாய் ஒன்று இருக்கிறது. கல்கோனா. கோலிகுண்டு மாதிரி உருண்டையாய் இருக்கும் ஒரு மாவுருண்டை. சீக்கிரத்தில் கரையாது. வகுப்பில் வாயில் போட்டு உட்கார்ந்தால் ஒரு பீரிடு ஃபுல்லா போகும். அதை உடைக்கும் போட்டி கூட நடத்துவோம்.

மாலை ஆறு மணிக்கு ட்யூசன். இதுதான் ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கும் பிடிக்காத நேரம். பள்ளியிலாவது கூட்டத்தோடு, கூட்டமாய் சமாளித்துவிடலாம். அடி வாங்கினால் கூட துணைக்கு ஒருத்தன் இருப்பான். இங்கு அப்படியல்ல. தனியேதான் அடி வாங்கனும். கட்டாயம், படித்து, ஒப்பித்துக் காண்பித்தால்தான் வீட்டிற்குச் செல்ல முடியும். வீட்டில் செய்த சேட்டைக்கெல்லாம் இங்கேதான் அடி விழும். அப்பவே எங்க வீட்டுல என்னை ஆள் வச்சு அடிச்சிருக்காங்க!

லீவு ஃபுல்லா ஒரே விளையாட்டுதான். அப்போதெல்லாம் மணல் தெருதான். இப்போதுதான் சிமெண்ட் ரோடெல்லாம் போட்டு நமது பாரம்பரிய(!) விளையாட்டுக்களை அழித்து விட்டார்களே. இவை மறைந்ததற்கு கிரிக்கெட்டும் ஒரு முக்கிய காரணி. பம்பரம், கோலிக்காய், சிகரெட் அட்டை, குச்சி கம்பு, லக்கி ப்ரைஸ் - இப்படி சீசன் தோறும் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் இருட்டிய பின் கரண்ட் அடிக்கடி போகும். அந்த நேரங்களில்தான் கண்ணாமூச்சி மிகவும் சுவாரஸ்யம் பிடிக்கும். லீவு விட்டால் போதும், தெருவே அல்லோலப்படும். ஒவ்வோரு வீட்டு வாசலையும் பம்பரம் விளையாண்டு குழியாக்கி விரட்டியடிக்கப்படுவோம். அடுத்து இன்னொரு வீட்டு வாசல்....

(தொடரும் - அடுத்து வருவது: பம்பரம்)
---
ஏனாஓனா.

Share/Bookmark

15 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...

//முடிந்து மதிய வகுப்புக்குச் செல்லும்போது, சட்டை வேறு நிறத்தில் இருக்கும். சில பட்டன்கள் இருக்காது. என் அம்மா அதிகம் பட்டன் வாங்கியது இந்த நேரத்தில்தான். சில நேரங்களில், டௌசர் பட்டன் கூட காணாமல் போய்விடும்.//

எனக்கும் அடிக்கடி நேர்திருக்கிறது இதே போல் :))

நல்லாயிருக்கு பிரதாப்

Beski said...

//எனக்கும் அடிக்கடி நேர்திருக்கிறது இதே போல் :))//
எனது இனமடா நீ!

//நல்லாயிருக்கு பிரதாப்//
நன்றி ஆதவன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மாலை ஆறு மணிக்கு ட்யூசன்.//

படிச்சது ஒண்ணாங்கிளாஸ் இதுல டியூசன் வேற.. ஆமா ராஜா அப்போ டியுசன் எல்லாம் இருந்துச்சா?

Beski said...

//படிச்சது ஒண்ணாங்கிளாஸ் இதுல டியூசன் வேற.. ஆமா ராஜா அப்போ டியுசன் எல்லாம் இருந்துச்சா?//

இப்படியெல்லாம் கிராஸ் கொஸ்டின் கேக்கப்பிடாது.

டியூசன் இருந்திச்சி. 3 லிருந்து 5 வர பக்கத்து வீட்டுல முத்துலெச்சுமி டீச்சர் கிட்ட, அதே தெருவுலதான். அப்புறம் எட்டு வர தெய்வான டீச்சர் வீட்ல, அடுத்த தெரு. 10 வர ---- சார் கிட்ட, 2 தெரு தள்ளி. அப்புறம் 12 வர செல்வின் சார் கிட்ட 5 தெரு தள்ளி...

இதுல ஏதாவது புரியுதா?

ஷங்கி said...

இந்த விளையாட்டுகளின் பெயர்களை, நாங்கள் சொல்றமாதிரியே சொல்வதை இப்போதுதான் இணையத்தில் பார்க்கிறேன். தொடருங்கள்!

Beski said...

//சங்கா said...
இந்த விளையாட்டுகளின் பெயர்களை, நாங்கள் சொல்றமாதிரியே சொல்வதை இப்போதுதான் இணையத்தில் பார்க்கிறேன். தொடருங்கள்!//

அப்படியா... நம்ம ஊரு வெளயாட்டுக்களப் பத்தி நா பதிஞ்சுர்றேன்.

நன்றி அண்ணே.

Unknown said...

// இதை விட தேன் மிட்டாய் எனக்கு ரொம்ப புடிக்கும்.//

அட, எஅன்க்கும் பிடிக்கும், மாப்பு... தேன் மிட்டாய்..!

Unknown said...

// இதை விட தேன் மிட்டாய் எனக்கு ரொம்ப புடிக்கும். //

அட, எனக்கும் தேன் மிட்டாய் ப்டிக்கும், மாப்பு..!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உப்புமூட்டசண்ட பத்தி சொன்னதற்கு நன்றி தம்பி

கார்த்திக் said...

/* பம்பரம், கோலிக்காய், சிகரெட் அட்டை, குச்சி கம்பு, லக்கி ப்ரைஸ் - இப்படி சீசன் தோறும் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் இருட்டிய பின் கரண்ட் அடிக்கடி போகும் */

அருமை.. அப்போது ஃபாரீன் சிகரெட் அட்டைக்கு நல்ல மவுசு..நிறைய பாயிண்டு கிடைக்கும்..

கார்த்திக் said...

/* பம்பரம், கோலிக்காய், சிகரெட் அட்டை, குச்சி கம்பு, லக்கி ப்ரைஸ் - இப்படி சீசன் தோறும் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் இருட்டிய பின் கரண்ட் அடிக்கடி போகும் */

அருமை.. அப்போது ஃபாரீன் சிகரெட் அட்டைக்கு நல்ல மவுசு..நிறைய பாயிண்டு கிடைக்கும்..

Beski said...

/எழில். ரா said...
அட, எனக்கும் தேன் மிட்டாய் ப்டிக்கும், மாப்பு..!//

மச்சான், நாமல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான்னு இங்கயும் நிரூபிக்கிறீங்க பாத்தீங்களா!

Beski said...

வாங்க கார்த்திக்... வருகைக்கு நன்றி.
---
//அப்போது ஃபாரீன் சிகரெட் அட்டைக்கு நல்ல மவுசு..நிறைய பாயிண்டு கிடைக்கும்..//

நீங்களும் விளையாடியிருக்கீங்க போல இருக்கு!
ஆமா.
சிசர் 5 ரூவா, பில்டர் 10, பெர்க்கிலி 50, 555 லாம் கொஞ்சம் கூட மதிப்பு. மத்ததெல்லாம் ஞாபகம் இல்ல.

இதுல இன்னொரு குரூப்பு உண்டு. காசு குடுத்து பெட்டிக்கடைல நெறையா வாங்கி, ஒரு கண்ணாடி கவர்ல போட்டுக்கிட்டு, கெத்தா கைல வச்சிக்கிட்டு, வெளையாடுற இடத்துல சுத்திக்கிட்டு இருப்பானுக. ஆனா களத்துல எறங்குறதே கிடையாது, சும்மா படம் மட்டுந்தான்.

jothi said...

/
அட, எனக்கும் தேன் மிட்டாய் ப்டிக்கும், மாப்பு..!//
அது தேனான்னு தெரியாது,.. ஆனா நல்லா இருக்கும்,..

உங்க உப்பு மூட்டயைதான் WWF காப்பி அடிச்சிட்டுனாங்களோ??

Beski said...

//அது தேனான்னு தெரியாது,.. ஆனா நல்லா இருக்கும்,..//
அது தேன் இல்லையென்றே நினைக்கிறேன்.

//உங்க உப்பு மூட்டயைதான் WWF காப்பி அடிச்சிட்டுனாங்களோ??//
அது எப்படியோ தெரியாது. இப்போ இன்னோன்னு ஞாபகத்துக்கு வருது. wwf வந்த புதுசு. நானும் தம்பிகளும் அதேபோல பாவனைகளுடன் மெத்தையில் விளையாடி அப்பாவிடம் அடி வாங்குவோம். wwf கார்டுகளை வாங்கி விளையாடி பொழுதெல்லாம் கழித்தோம். அதன் பின் அதுவே கிரிக்கெட் கார்டாகவும் வந்தது.