அன்று ஓரு இரவில்.........(2)

..............வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது
நடுங்க துவங்கியது.

//குறை ஒன்றும் இல்லை !!! said... அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி
ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\\

நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என
பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால்
அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,
மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே சென்று
விடலாமா என்று ஒரு கணம் யோசித்து அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டேன் .
காரணம் பிடிவாதம், போட்டியில் வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம்.


சிறிது தூரம்கூட சென்றிருப்பேன், அந்த வெளிச்சத்தின் நடுவிலிருந்து ஒரு
வெள்ளை உருவம் சற்று வேகமாக முன் வருவதுபோல் தோன்றியது.
கண்ணை கூர்மையாக்கி பார்த்தேன் அந்த உருவம் உண்மையிலேயே
என்னை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அதுவும் 2.5 அடி
உயரத்தில் மிதந்து வந்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் என் எல்லா
நரம்புகளும் ஜில்லிட்டது. அந்த வெளிச்சம் தூரமாகவே தெரிந்த்து.

வெள்ளை உருவம் 400mtr, 300mtr, 200mtr, 100mtr என குறைந்து 50mtr
தூரம் ஆனபோது, சட்டென்று டிடிங் டிடிங், டிடிங் டிடிங் என்ற சத்தம்
என் வயிற்றில் பாலை வார்த்தது. அப்போதுதான் புரிந்தது வந்தது
வெள்ளை வேட்டியை மடித்து கட்டிய சைக்கிள்காரர் என்று.அவர்
வேட்டியை மடித்து கட்டி சைக்கிள்ஓட்டி வந்ததால் இருட்டில் அவருடைய
சைக்கிள் என் கண்ணுக்கு புலப்படாமல் இருந்திருக்கிறது.

நான் அவரிடமே கேட்டேன், அங்கே அது என்ன வெளிச்சம் என்று.
“அதுவா, சுடுகாட்டில் பிணத்தை எரித்து விட்டு சிலபேர் கையில்
தீப்பந்தத்துடன் வர்ராங்கோ” என்றார்.(ஓ அதுதான் அந்த வெளிச்சப்புள்ளிகள்
ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,மேலும், கீழுமாக
வந்ததோ???)

அதன் பின் சுடுகாடு நோக்கி வேகமாக நடக்க துவங்கினேன்.சுடுகாட்டிலிருந்து
வருபவர்களின் அருகில் சென்றபோது அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.
“சே என்ன பொண்ணு இது, ஒரு கொலுசு தொலைஞ்சுபோய் திட்டினதுக்கு
போய் தற்கொலை செஞ்சிடுச்சே” என ஒருவர். இன்னொருவர் “யாருக்குத்
தெரியும் தற்கொலையா கொலையான்னு” சொல்ல “சும்மா பொத்திட்டு
போவியா?! அவ அப்பன் பின்னாடி வந்திட்டிருக்கான்”என ஒருவர் அவர்
வாயை மூடினார்.அப்புறம் என் காதில் அவர்கள் பேச்சு சரியாக விழவில்லை

சுமார் 12.15 மணியளவில் சுடுகாட்டையடைந்தேன். அப்போது அந்த
இளம்பெண்ணின் பிணம் எரிந்துக்கொண்டிருந்தது.அதனருகில் 2 பேர் கையில்
பெரிய கழியுடன் நின்றுக்கொண்டிருந்தனர்.ஏனோ அந்த முகம் தெரியாத பெண்ணின்
மேல் ஒரு பரிதாபம் தோன்றியது.இருப்பினும் காரியத்தில் கண்ணாக பூ பறிக்க
அந்த மரத்தின் அருகில் சென்றபோது “என்னப்பா அங்க அர்த்தசாமத்தில”
என்றனர் அவ்விருவரும். “ஒண்ணுமில்லங்க ஒரு மருந்துக்கு இந்த பூ வேண்டும்”
என்றேன். “சரி சரி சட்டுனு எடுத்து கெளம்பு” என்றனர்.

உடனே மரத்தில் ஏறி பூ பறித்து கிளம்பினேன்.அப்பாடா நான் ஜெயித்துவிட்டேன்
என மனதில் நினைத்து கிளம்பினேன்.ஆனால் அதன்பின் தான் என்னை குலை
நடுங்கவைத்த அந்த சம்பவம் நடந்தது.

அது என்னான்னா...........................................?


(தொடரும்)






Share/Bookmark

7 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

சீரியல் ரொம்ப பாக்குர ஆளோ??? அடிக்கடி தொடரும் போடுறீங்க?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
சீரியல் ரொம்ப பாக்குர ஆளோ??? அடிக்கடி தொடரும் போடுறீங்க?\\


குறை ஒன்றும் இல்லை, அப்படி ஒன்றும் இல்லை வேலையின் காரணமாக வேளை (நேரம்) இல்லை.
அது மட்டுமல்ல ஒரே நாள் நிறைய போட்டால் படிப்பவர்களுக்கு போரடித்துவிடும் என நினைதேன்.

க.பாலாசி said...

//(ஓ அதுதான் அந்த வெளிச்சப்புள்ளிகள்
ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,மேலும், கீழுமாக
வந்ததோ???)//

அட ஆமான்னே. உங்களுக்கு தெரியாதா? என்னமோ போங்க சின்னபிள்ளத்தனமால்ல இருக்கு.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

///பாலாஜி said...
//(ஓ அதுதான் அந்த வெளிச்சப்புள்ளிகள்
ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும்,மேலும், கீழுமாக
வந்ததோ???)//

அட ஆமான்னே. உங்களுக்கு தெரியாதா? என்னமோ போங்க சின்னபிள்ளத்தனமால்ல இருக்கு.\\



அந்த இடத்தில் அப்போது பயந்தேன் என்பது உண்மை.

Nathanjagk said...

அன்பு கிகி... திகிலா இருக்குங்க! என் விரல் நக​மெல்லாம் தீந்து ​போயி பக்கத்தில இருக்கிறவங்க விரலை கடன்வாங்கி நகங் கடிச்சுட்டு படிக்கிறேன்!! எங்கு ​வேப்பிலை அடித்துவிடப்படுன்னு ​சொன்னா புண்ணியமா ​போகும்! ஆமா இது ஏனாஓனாவோட அனுபவமா இல்ல உங்களுதா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன் said...
அன்பு கிகி... திகிலா இருக்குங்க! என் விரல் நக​மெல்லாம் தீந்து ​போயி பக்கத்தில இருக்கிறவங்க விரலை கடன்வாங்கி நகங் கடிச்சுட்டு படிக்கிறேன்!! எங்கு ​வேப்பிலை அடித்துவிடப்படுன்னு ​சொன்னா புண்ணியமா ​போகும்! ஆமா இது ஏனாஓனாவோடஅனுபவமா இல்ல உங்களுதா\\


இது என்னுடைய அனுபவம்.1995 ல் நடந்தது.நான் ஏனா ஓனா-வை முதலில் சந்தித்தது 2003-ல் தான்.

ஷங்கி said...

என்னங்க இன்னும் திகில் பிகில் விடுறீங்க?! தம்பி ஜெகநாதன், எனக்கும் கொஞ்சும் நகம் கடன் குடுங்க!