பள்ளிக்கூடம் 3 - பம்பரம்

பள்ளிக்கூடம் 2 - உப்புமூட்டசண்ட இதன் தொடர்ச்சி...

---

சின்ன வயதில் பல விளையாட்டுக்கள் விளையாண்டபோதும், இந்தப் பம்பரமும், கோலிக்காயும்தான் வீரவிளையாட்டுக்களாக கருதப்பட்டது எங்களால். அதிலும் பம்பரத்தின்மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமே. முந்தைய பதிவில் உப்புமூட்டசண்ட விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் (டேய்.... ச்சூ ச்சூ...), இங்கு பம்பரம் விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். (இதில் நிறைய விடுபட்டிருக்கலாம், முடிந்தவரை ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறேன்)


பம்பரத்தில் வட்டம் பொடியர்களின் விளையாட்டாகக் கருதலாம், இதில் பம்பரத்திற்கு ஆபத்து கம்மிதான். முதலில் ஒன், டூ, த்ரீ சொல்லி எல்லாரும் ‘கோஸ்’ எடுக்க வேண்டும். கடைசியாக எடுப்பவன்/எடுக்க முடியாதவன் பம்பரம் வட்டத்திற்கு உள்ளே வைக்க வேண்டும். அடுத்து மற்றவர் ஒவ்வொருவராக உள்ளே இருப்பதை குத்தி(பம்பரம் விட்டு) வெளியே எடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் பம்பரம் வெளியே வந்தால் அனைவரும் கோஸ் எடுக்க வேண்டும். மீண்டும் கடைசியாக எடுப்பவன் பம்பரம் உள்ளே. இப்படியே போய்க்கொண்டிருக்கும். இது மட்டுமல்ல, இதிலே இன்னும் பல ரூல்ஸ் இருக்கு. உள்ளே இருக்கும் பம்பரத்தைக் குத்தி வெளியே எடுக்கும்போது, விடுபவன் பம்பரம் ஆடாமல் போய்விட்டால், அதுவும் உள்ளே வந்துவிடும். உள்ளே ஆடிக்கொண்டிருக்கும் பம்பரத்தை, உள்ளேயே அமுக்கிவிட்டால் அதுவும் உள்ளே. உள்ளே இருப்பவற்றுள், குத்தும்போது ஒரு சில மட்டும் வெளியே வந்தால் அவர்கள் ஆட்டத்தைத் தொடரலாம். அனைத்தும் வெளியே வரும் பட்சத்தில் மீண்டும் கோஸ், மீண்டும் கடைசி உள்ளே... இப்படி போய்கிட்டே இருக்கும்.

இங்க நமக்குனு ஒரு ரசிகர் படை இருக்கும். நாம அடிக்கடி குத்துறதே கிடையாது. குத்தும்போது உள்ள மாட்டிக்குவோமோனு பயம். கோஸ் எடுக்க மட்டுந்தான் ரெடியா இருப்போம். உள்ள நம்மாலு இருந்தா எதுவும் சொல்ல் மாட்டான். அதே எதிர் கோஸ்டி இருந்தா, ‘இவன் விடவே மட்டேங்குறாண்டா’ அப்டினு குத்தச் சொல்லி நம்ம பம்பரத்த அமுக்கி உள்ள போடுருவானுங்க. நம்ம பசங்க சும்மா இருப்பானுங்களா? கரெக்டா நம்ம பம்பரத்த மட்டும் குத்தி வெளிய எடுத்துருவானுக. ஏன் அப்படினு யோசிக்கிறீங்களா? நாம கொஞ்சம் அதிகமா மார்க் எடுக்குறதால நமக்கு அடுத்த ரேங்க்ல உள்ள பசங்க கொஞ்சம் பாசமா இருப்பானுக. எதிர் கோஸ்டினு சொன்னது பெயில் ஆகுற கேசு. நம்மள கண்டுக்கவே மாட்டானுக. நா எவ்ளோ மார்க் எடுத்தா அவனுவளுக்கு என்ன?

பம்பரத்துல ரெண்டு உண்டு. சாதா பம்பரம், சட்டி பம்பரம். இதுல சட்டி பம்பரத்துக்குத்தான் கொஞ்சம் மவுசு, கொஞ்சம் காஸ்ட்லி. பம்பரம் வாங்கும்போது அதுல சின்ன ஆணிதான் இருக்கும். அதெல்லாம் வச்சு நாம விளையாட மாட்டோம். வாங்குன உடனே நேரா பட்டரைக்குத்தான் போவோம். அங்க பம்பரத்துக்கு ஆணி வைக்கிற எக்ஸ்பர்ட்டு ஒருத்தர் இருப்பாரு. இந்த ஆணிய எடுத்துட்டு, ’நாலு மூக்கு ஆணி’ வச்சி குடுப்பாரு. இது எதுக்குனு கேக்குறீங்களா? அப்பத்தான் ஆக்கர் விளையாடும்போது குத்திக் கிழிக்க முடியும்.

ஆக்கர்... இதுதான் நம்ம வீர விளையாட்டு. வட்டம் மாதிரிதான், ஆனா இதுல கட்டம். அதே மாதிரி கோஸ் எடுத்து எடுத்து விளையாடனும். ஆனா இதுல கோஸ் மூனு தடவதான். கடைசியா மாட்டுற பம்பரத்த, குத்தி குத்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எடுத்துட்டு போகனும். அப்படி குத்தும்போது 3 முறை தொடர்ந்து அந்தப் பம்பரத்துல படலன்னா, அவங்க பம்பரம் அந்த இடத்துக்கு வந்துரும். டார்கெட் வர எந்த பம்பரம் வருதோ அத எடுத்து ஆளுக்கு கொஞ்சம் வசமா குத்திக்கலாம் (ஆட்டைக்கி இத்தன குத்துன்னு இருக்கும்). கல்லத்தூக்கிப் போட்டாவது அந்த பம்பரத்த ரெண்டா பொளந்துருவானுக. அப்படியும் அது தப்பிச்சுச்சுனா, பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன்ல வர்ற மாதிரி பாதி மூஞ்சி காணாமப் போயிருக்கும்.

---

கோலிக்கா, சிகரெட் அட்ட, லக்கி பிரைஸ்... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா நமக்கே கொஞ்சம் போரடிக்கிது. அதனால, மத்ததெல்லாம் மெதுவா எழுதுறேன். ஆனா, அடுத்த பதிவுல இன்னும் ஒரு இண்ட்ரஸ்டிங் மேட்டரோட இந்த பள்ளிக்கூடத்த முடிச்சிக்கிறேன்.

---

அப்புறம் மத்தவங்க எழுதுன பள்ளிக்கூடத்துல எல்லாம் அவங்க அவங்க ஸ்கூல் பேரு, டீச்சர் பேரு, டாவடிச்ச பொண்ணுக பேரெல்லாம் போட்டுருந்தாங்க. அட இதெல்லாம் நமக்கு தோனாம போச்சேனு ஒரே ஃபீலிங். நம்ம ஸ்கூல் பேரையாவது சொல்லனுமில்லையா?
நான் படித்த பள்ளி, ஸ்ரீ சரவணைய்யர் நடுநிலைப் பள்ளி, திருச்செந்தூர். மிகவும் பழமைவாய்ந்த பள்ளி, 1895ல் தொடங்கப்பட்டது.

---

அடுத்து (மற்றும் முடிவு) - டிவி டெக் வாடகைக்கு.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

15 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல மலரும் நினைவுகள். நாங்க ரெண்டு பம்பரம் வச்சுக்குவோம்.. ஒண்ணு விளையாட இன்னொண்னு நெங்கு ஏத்த...

jothi said...

பம்பரம்னா? சின்னகவுண்டர் படத்துல சுகன்யா வய்த்துல விஜயகாந்த் விடுவாரே அதான?

டார்டாய்ஸ் நல்லா வருது உங்களுக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

பம்பர விளையாட்டின் வர்ணிப்பு இப்போ கூட விளையாடணும்போல தோணுது....

Beski said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல மலரும் நினைவுகள். நாங்க ரெண்டு பம்பரம் வச்சுக்குவோம்.. ஒண்ணு விளையாட இன்னொண்னு நெங்கு ஏத்த...//

அதெல்லாம் கல்லாட்ட... எத வச்சி வெளாடுறோமோ அத வச்சிதான் ஆக்கர் போடனும்.
இல்லன்னா நீங்க அடுத்த ஆட்டக்கி கெடையாது.
---
என்ன இருந்தாலும், பம்பரம் விடும்போது விழுகின்ற பதிவைப் பார்த்து, நம் ஆனியில் பதியும் கலரையும், அது விழுந்த இடத்தையும் ஒப்பிட்டு, அதுல கிடைக்கிற பெருமிதமே தனி.

Beski said...

//jothi said...
பம்பரம்னா? சின்னகவுண்டர் படத்துல சுகன்யா வய்த்துல விஜயகாந்த் விடுவாரே அதான?//

உங்களுக்கு இதுதான் ஞாபகத்துக்கு வருதா? ம்ம்ம்...
இவ்ளோ சொல்லிருக்கேன், இதுல ஒரு சந்தேகமும் வரல?!

Beski said...

//பிரியமுடன்.........வசந்த் said...
பம்பர விளையாட்டின் வர்ணிப்பு இப்போ கூட விளையாடணும்போல தோணுது....//

எங்க தலைவா... ரோட்டப் பூரா சிமெண்ட் போட்டு அடைச்சிட்டனுவ, இப்ப குத்துனோம்னா ஆணி மொட்டயாப் பொருமே! இதுக்குனு தனி கிரவுண்டு வச்சி வளத்தாத்தான் உண்டு போல. இப்படியே போச்சுன்னா இதெல்லாம் அழிஞ்சே போயிரும்.

Beski said...

ராஜ், ஜோதி, வசந்த்,
தங்கள் வருகைக்கு நன்றி.

Nathanjagk said...

நல்லா சாட்டையச் சுத்தி விட்ட பம்பரமாட்ட இருக்கப்பா உன் எழுத்து மனசிலேயே.. பம்பரத்தைப் பத்தி முழுசா படிச்ச மாதிரி ஒரு பீலிங்! பம்பரம் எப்படி முக்கியமோ அதே மாதிரிதான் சாட்டை வாரும். சாட்டை வார் நுனிக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சும்மா முடிச்சுப் ​போட்ட விடுறதில ஆரம்பிச்சு, ​சோடா பாட்டில் மூடி வைக்கிறது வரைக்கும் ஒருபட்டாபி​ஷேகமே நடக்கும் சாட்டைக்கு. ஞாபகமிருக்கா?

சிநேகிதன் அக்பர் said...

வாழ்க்கையில் எல்லோருக்கும் இப்படித்தான் போல.

Beski said...

//அக்பர் said...
வாழ்க்கையில் எல்லோருக்கும் இப்படித்தான் போல.//

ஆமா அக்பர். வருகைக்கு நன்றி.

Beski said...

விருதிற்கு நன்றி ராஜ்.

Unknown said...

மதுரைல இன்னும் என் பம்பரம் இருக்கு, எப்பயாவது பழைய ஞாபகம் வந்தா எடுத்து ஒரு சுத்து சுத்தி கோஸ் எடுக்குறது உண்டு.

என்னோட சாட்டைக்கு 7அப் மூடிதான் :))))

Beski said...

//ஜெகநாதன் said...
பம்பரம் எப்படி முக்கியமோ அதே மாதிரிதான் சாட்டை வாரும். சாட்டை வார் நுனிக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சும்மா முடிச்சுப் ​போட்ட விடுறதில ஆரம்பிச்சு, ​சோடா பாட்டில் மூடி வைக்கிறது வரைக்கும் ஒருபட்டாபி​ஷேகமே நடக்கும் சாட்டைக்கு. ஞாபகமிருக்கா?//

நல்லா ஞாபகம் இருக்கு மாம்ஸே. அதுலயும் அந்த மூடிய நல்லா கல்ல வச்சு சப்பி ஒரு க்ரூப்பு யூஸ் பண்ணும். அடிக்கடி கயிரு நுனி பிஞ்சு போயிரும், திரும்ப முடிச்ச ரினீவல் பண்ணனும். இப்படியே லெந்த் கொறஞ்சிட்டே வரும்....

வருகைக்கு நன்றி மாம்ஸ்.

Beski said...

//எழில். ரா said...

மதுரைல இன்னும் என் பம்பரம் இருக்கு, எப்பயாவது பழைய ஞாபகம் வந்தா எடுத்து ஒரு சுத்து சுத்தி கோஸ் எடுக்குறது உண்டு.

என்னோட சாட்டைக்கு 7அப் மூடிதான் :))))//

நமக்கு அந்த குடுப்பன இல்ல மச்சான். இன்னும் அங்க மண் தர இருக்கா? பேசாம அங்க வந்து பதிவர்களுக்கு ஒரு பம்பர டோனம்ண்டு நடத்தலாம்.

வருகைக்கு நன்றி மச்சான்.

Unknown said...

//நமக்கு அந்த குடுப்பன இல்ல மச்சான். இன்னும் அங்க மண் தர இருக்கா?//

ஆமா, வீட்டு பக்கத்துல ஒரு சின்ன கிரிக்கெட் கிரௌண்ட் இருக்கு... அது மட்டுமில்ல.. வீட்ட சுத்தி ஒரு குட்டி தோட்டம் இருக்கு, அங்க மண் தரைதான். அங்கயும் விளையாடுவோம்.

// பேசாம அங்க வந்து பதிவர்களுக்கு ஒரு பம்பர டோனம்ண்டு நடத்தலாம்.//
நடத்திருவோம்..!!