அவள் மிக அழகானவள்.
நீளமாய் இருப்பாள், நீலமாய் இருப்பாள்.
மிகவும் பிரகாசமான சூரியனைப் பொட்டாகக் கொண்டிருப்பாள், அந்தப் பொட்டின் நிறம் அவளது மனநிலையக் காட்டும்.
சில நேரங்களில் மஞ்சளாய் மங்களகரமாக, சில நேரங்களில் சிவப்பாய் பத்திரகாளியாக, சில நேரங்களில் பெரிதாய் பட்டிக்காடு போல, சில நேரங்களில் சிறிதாய் பட்டணம் போல.
அவள் வெட்கப்படும்போது கூந்தலை அள்ளி முகத்தை மறைத்துக்கொள்வாள்.
அந்தக் கூந்தல் கருமையாகவோ, வெண்மையாகவோ, இரண்டும் கலந்தோ அல்லது அவளது பொட்டின் நிறத்தை உள்வாங்கி, அழகிய வர்ண மாயாஜாலம் செய்ததுபோலவோ இருக்கும்.
அவள் மகிழ்ச்சியாய் நடனமாடும்போது, பல நிறங்களை உடைய துணியை எடுத்துத் தாவணியாகப் போர்த்திக் கொள்வாள்.
கோபம் வந்தாலோ முகத்தைக் காட்ட மாட்டாள், இடியெனக் கத்துவாள், மின்னல் அவளது கண்களில் தெரிக்கும்.
சிறிது நேரத்தில் சோ வென அழுது புலம்புவாள்; அப்போது மிகுந்த காதல் தோல்வியால் அவதிப்படுகிறாள் என்றே தோன்றும்.
அழுது முடித்தாலோ குழந்தையென அமைதிகொள்வாள்.
அவள் உறங்குவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம், மின்னுகிற பருக்கள் அவளது அழகினைக் கூட்டும்.
குளிர்ந்த, வெண்மையான பொட்டை அப்போது சூடிக்கொள்வாள். அதன் அளவு, அவளது மகிழ்ச்சிக்கும் சோகத்திற்குமான அளவுகோல்.
எப்போதாவது அதிசயமாய் எச்சில் வடிப்பாள், அதைப் பார்ப்பவர்களுக்கு அதிஷ்டம் என்றொரு நம்பிக்கை.
நிறத்தை மாற்றி மாற்றி, உலகை உருட்டுவதால், அவளுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. அவள் மட்டும் இல்லையென்றால், எனது வாழ்வு ஓடுகிறது என்பதே எனக்குத் தெரியாமல் போய்விடும்.
---
4 ஊக்கங்கள்:
Wonderful, Excellent. When I read this at first time I meant all these words to a girl only. When I read second time only I got u ve talked fully about the Sky ( Of course U ve mentioned in a title itself, But still...) A well coined story (Girl + Sky). Excellent words. A big salute to ur beautiful thoughts. My best wishes to u for ur future story and poems
அனானிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ப்ளாக்கரில் இருந்து கவிஞரா? நடத்துக்கையா!!! வாழ்த்துக்கள்!!!
/ப்ளாக்கரில் இருந்து கவிஞரா? //
ஏதோ ஒன்ன எழுதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
அதான் பேரே இப்படி //ஏதோ டாட் காம்//
Post a Comment