சென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தேன். பைக் பார்க்கிங் விட்டுவிட்டு எவ்வளவு என்றேன்; சொன்னார்கள். சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். ‘15 ரூபாய்’. ங்க்கொய்யால... காலையில் நான் சாப்பிடும் டிபனின் விலை!
இதெல்லாம் நியாயமா? எக்மோர்ல இதே பைக்க விடுறதுக்கு 3 ரூபாய். இங்க மட்டும் 15 ரூபாயா? என்ன நெனப்புலதான் இப்படி பண்றாங்க? இங்க வர்றவங்க எல்லாரும் பணக்காரங்கதானா? இல்ல என்ன மாதிரி மிடில் கிலாஸ் வரமாட்டாங்களா? இல்ல வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களா?
’ஐடி காரனுங்கதான் லேண்ட் வேல்யுவ ஏத்துறாங்க, அதிகமா சம்பளம் வாங்குறதால, கேக்குற வாடகைய குடுத்துடுறாங்க, அவங்களாலதான் எல்லாரும் கஷ்டப்படுறாங்கன்னு’ கூசாம சொல்றாங்களே. நான் என்ன தானாவே முன் வந்து 4000 கேக்குற இடத்துல ‘பரவால்ல சார், என்கிட்ட பணம் நெறையா இருக்கு, 5000மா வச்சிக்குங்க’ன்னா சொல்றேன். 6000 சொல்றவர்கிட்ட, அரைமணி நேரம் பேசி 5750 கொண்டுவறதுக்குள்ள என்ன என்னமோ பிச்சாக்காரனப் பாக்குற மாதிரில்ல பாக்குறாங்க ஓனர்லாம். நியாயமான வாடகை வாங்குறவங்களும் இருக்காங்க; அவங்கள மாதிரி எல்லாரும் இருந்தா நான் ஏன் அதிகமா வடகை குடுக்கப்போறேன்? கஷ்டப்பட்டு படிச்சு, வேல தேடி அலஞ்சு, ஒரு வழியா ஒரு வேலைல சேந்து, சம்பாதிக்குறதுல 25% வீட்டு வாடகைக்கே போகும்போது இருக்குற வருத்தம் எனக்குத்தான் தெரியும். அப்பாவோ, தாத்தாவோ சம்பாதிச்ச சொத்துல, ஒக்காந்து சாப்டுக்கிட்டு, என்னோட இயலாமையையும், சந்தர்பத்தையும் பயன்படுத்தி, இப்படி அநியாயமா வடகையைக் கேக்குற இவங்கள யாரும் குறை சொல்ல மாட்டாங்களா? சரி, கவர்மெண்டே கண்டுக்க மாட்டேங்குதேனு வருத்தப்படுற சமயத்துல, கவர்மெண்டே இடத்தையும், சந்தர்பத்தையும் பயன்படுத்தி இப்படி கொள்ளை அடிப்பதைப் பார்க்கும்போது, ‘நம்மளயெல்லாம் காப்பாத்த ஒருத்தன் பொறந்து வரமாட்டானா’னு சினிமா டயலாக்தான் மனசுல ஓடுது. வேலியே பயிர மேஞ்சா எங்க போயி காப்பாத்த சொல்லுறது?
இதை பிரைவேட்டே நடத்தினாலும், அரசு விலையை நிர்னயம் செய்ய முடியாதா? இதே கவர்மெண்ட், நிறுவனங்களுக்கு நஷ்டம் எனும் நிலையில் கூட கேஸ் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லையா? பைக் விடுற இடத்துல குறைவா வாங்குனா அவங்களுக்கு என்ன நஷ்டம் வந்துறப் போகுது?
டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கு, உற்பத்தி குறைவா இருக்கும்போது விலை ஏத்துனாக்கூட பரவாயில்ல. தினமலர்ல பாத்தேன், மகாராஸ்ட்ரால மொபைல் போன் வாட் வரிய 4%ல இருந்து, 12%ஆ ஏத்தப் போறாங்களாம். இதுனால அரசுக்கு வருமானம் கூடுமாம். இது போன்ற பொருட்கள் விற்பனை அதிகமா இருந்தா , விலை குறையும்னுதான் படிச்ச ஞாபகம். இது என்ன கணக்குன்னே தெரியல.
மதன் கூட அழகா சொல்லிருப்பாரு, மனிதனுக்குள் மிருகம் புத்தகத்துல... ‘வாய்ப்பு கிடைக்கும்போதும் தப்பு செய்யாமல் இருப்பவனே மனிதன்’ என்று. கொள்ளையடிக்கனும்னு முடிவு பண்ணிட்டா கவர்மெண்ட் என்ன, பிரைவேட் என்ன, வீட்டு ஓனர் என்ன, வாய்ப்பு கிடச்சா கறந்துவிடுகிறார்கள். ஆகவே, லேண்ட் வேல்யு ஏற ஐடி பீபில்தான் காரணம்னு மட்டும் சொல்லாதீங்க, வாடகை கம்மியா குடுக்க நான் ரெடி.
4 ஊக்கங்கள்:
nee karanam ilai aana it perai choli ooray amathutu, amaruthu
மாப்பு,
கோபப்படாதீய.. என்ன செய்ய..? நாம் எல்லாம் பாழாப்போன் ஐ.டி.ல இருக்கோம். அதான் வாய்கூசாம சொல்றானுவன.. இப்போ மதுரையிலயும் ஆரம்பிச்சுட்டானுங்க, இந்த ஐ.டில இருக்க்வகளுக்கு தனி வாடகைன்னு.. எங்க போயி சொல்ல, இந்த கொடுமைய??
// சம்பாதிக்குறதுல 25% வீட்டு வாடகைக்கே போகும்போது இருக்குற வருத்தம் எனக்குத்தான் தெரியும். //
கவலைபட வேண்டாம். சீக்கிரம் நல்ல காலம் பிறக்கும்(இது ஜக்கம்மா சொல்றது இல்ல.. :)) இது ஆறுதலுக்கு மட்டும் சொல்லல.. ம்னசிலிருந்து உண்மையா சொல்றது.
வாங்க மச்சான்.
//இப்போ மதுரையிலயும் ஆரம்பிச்சுட்டானுங்க, இந்த ஐ.டில இருக்க்வகளுக்கு தனி வாடகைன்னு//
அங்கயுமா? போச்சுடா.
//ம்னசிலிருந்து உண்மையா சொல்றது.//
ரொம்ப நன்றி. சீக்கிரம் பொறக்கட்டும்.
இவனுங்களே எல்லாம் செருப்பால அடிக்கணும் பாஸ்
Post a Comment