இன்னும் இன்னமும்.......

உன்னை என் முன்னால்
மண்டியிட வைத்திருப்பேன்
மந்திரம் தெரிந்திருந்தால்.......!


எனக்காய் நீ
தவமிருக்கச் செய்திருப்பேன்
தந்திரம் தெரிந்திருந்தால்.......!


என்னிடம் உன்னை
சரணடைய வைத்திருப்பேன்
சாதுரியம் தெரிந்திருந்தால்.......!


என்னை நீ
சுற்றி வர செய்திருப்பேன்,
சூழ்ச்சி தெரிந்திருந்தால்.......!


ஆனால்....
உன்னை காதலிக்க மட்டுமே
தெரிந்திருக்கிறேன்?!


ஆகையால்
என் காதல் கை கூடுமோ
என்னும் நினைவில்
நிமிடங்கள் யுகங்களாய்
சுகங்கள் இழந்து வாழ்கிறேன்,
இன்னும் இன்னமும்......


பி.கு:-

இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு
கல்லூரி முதலாமாண்டு ஆங்கில வகுப்பு நடக்கும் போது
குப்புற இருந்து கிறுக்கியது


---கி.கி.


Share/Bookmark

6 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ இந்த காதல் ஜெயித்ததா நண்பரே?

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ நீங்களும் பிசியா?

Unknown said...

அருமை, கி.கி..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்போ இந்த காதல் ஜெயித்ததா நண்பரே?\\


இது கற்பனை காதல்




// குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்போ நீங்களும் பிசியா?\\


கொஞ்சம் பிசி

Beski said...

//அப்போ நீங்களும் பிசியா?//
:))))

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

// எழில். ரா said...
அருமை, கி.கி..\\


நன்றி எழில்