அன்று ஒரு இரவில்..........

நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய
படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம்.

நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன்
எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும்
செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்”
என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட)

இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில்
இருந்திருக்கின்றனர்.அந்த நாளும் வந்தது....

அன்று இரவு ஏதோ ஒரு (சத்தியமா ஞாபகம் இல்ல) ஹிந்தி திகில் திரைப்படம் பர்த்த்து
விட்டு இரவு 9:30 ம்ணியளவில் அறைக்கு வந்தோம். அந்த அறை நான் தங்கும்
அறையில் இருந்து சுமார் 2 km தூரம் இருக்கும். இடையில் ஒரு சுடு காடும் உண்டு.

சுமார் 11:15 மணியளவில் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள் “நீ 11:45 மணிக்கு மேல்
இங்கிருந்து புறப்பட்டு சுடுகாட்டுக்கு சென்று அங்குள்ள சுடுகாட்டு பூ (ஏதோ ஒரு
வகை பூ அந்த சுடு காட்டில் மட்டும் பூத்து கிடப்பதை பார்த்திருக்கிறோம்)சிலவற்றை எடுத்துக்கொண்டு, பாலிடெக்னிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள தேக்கு தோப்பின் வழியாக உன்னுடைய அர்றைக்கு சென்று அங்குள்ள நண்பர்களை எழுப்பி அந்த பூவை
கொடுக்க வேண்டும்” என்று கூறி என் தைரியத்திற்கு சோதனை வைத்தார்கள்.

ஏற்கனவே திகில் திரைப்படம் பார்த்து, அதை குறித்து ஒன்றரை மணி நேரம் விவாதித்து
எல்லோருமே சிறிது திகிலாக இருந்த நேரம் இப்படி ஒரு சோதனையை அளித்த
நண்பர்களின் செயல் வெகு அருமை.(ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்) இருந்தாலும்
சோதனைக்கு ஒப்புக்கொண்டேன் சிறிது தைரியத்துடன்.

நான் புறப்படும் நேரத்தில் என்னுடைய கை விளக்கையும் அருமை நண்பன் ஒருவன்
மறைத்து வைத்து விட்டான். வேறு வழியில்லாமல் சுடுகாடு நோக்கி என் கால்கள்
செல்ல துவங்கியது....

அதுவரை இருளுக்கு பயப்படாத நான் அன்று சிறிது தடுமாறினேன். அது அன்று பார்த்த படத்தினாலோ,இல்லை நண்பர்களின் பயமுறுத்தனினாலோ தெரியவில்லை. சிறிது தூரம் நடந்திருப்பேன் 2 நாய்களின் ஊளை கர்ண கொடூரமாய் கேட்க ஆரம்பித்தது, அன்று வரை
சாதரணமாக தோன்றும் சில் வண்டுகளின் ரீங்காரம், அன்று பயங்கரமாய் தோன்றியது.
ஏனோ தெரியவில்லை அடி முதல் முடி வரை சில்லிட்டது போன்ற உணர்வு. இருப்பினும்
நடந்துகொண்டிருந்தேன். கௌரவத்தை காப்பற்ற வேண்டும் அல்லவா......??

இன்னும் சிறிது தூரம் நடந்திருப்பேன், சற்று தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிந்தது.
என்னடா இது இந்தப்பக்கம் வீடு கீடு எதுவும் கிடையாதே..? அப்புறம் அது என்ன வெளிச்சம்
சுடுகாட்டிற்கும் 1/2 km தூரம் உள்ளதே என்று எண்ணும் போதே ஒரு வெளிச்ச புள்ளி 2
வெளிச்ச புள்ளி ஆனது. அவை என்னை நோக்கி வருவது போல் தோன்றியது, இல்லை
இல்லை உண்மையிலேயே வந்து கொண்டிருந்தது. வெளிச்ச புள்ளிகள் என்னை
நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது.

அதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. எனவே மீதி சம்பவத்தை அடுத்த
பதிவில் தொடர்கிறேன்.

(தொடரும் என் நடுக்கம் தீர்ந்தால்........??????)


--கி.கி.



Share/Bookmark

5 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில்//

கவுண்டர் : என்னமோ அமெரிக்காவில கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டிக்கு போன மாதிறி என்ன லவுட்டு..

அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச புள்ளி ஏதாவது மிருகம் தானே? இல்ல வண்டியா?\\

இரண்டும் இல்லை, அது ...........???
மன்னிக்கவும் நான் அவசரமாக மங்களூர் செல்வதால்,
ஞாயிறன்று கூறுகிறேன்.

கிரி said...

//நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய
படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம்.//

ஆஹா! நீங்க நம்ம பக்கத்து ஊரு தானா.. நான் கோபிங்கோ :-)

ஷங்கி said...

கிறுக்கல் கிறுக்கன், திகில் அனுபவத்தின் அடுத்த பகுதியை எதிர்நோக்கி...
என் கல்லூரிக் காலத்தில் இதே மாதிரி ஒரு அனுபவம் எனக்கும்.. ஆனால் சுடுகாடெல்லாம் இல்லை, எங்க டிபார்ட்மெண்ட்தான். தனியாகவு இல்லை, ஒரு கூட்டமாகத்தான் சென்றோம்!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

கிரி நான் அங்க படிச்சதுங்கோ, ஆனா அந்த ஊர ரொம்ப பிடிக்குமுங்கோ