குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்.........


ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும்
மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது
தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா
என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று
தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம்.

மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே
பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில்
உள்ள குரங்கு அருவிக்கு ஒருகுட்டி விசிட் அடிக்கலாம் என முடிவெடுதோம்.

முடிவெடுத்தபடி உடனே புறப்பட்டோம்.செல்லும் வழி பச்சை பசேல் என
கண்ணுக்கு விருந்தளித்தது. அதன் செயற்கைகோள் படம் பார்வைக்கு










ஆழியார் அணையை ஏற்கனவே பார்த்துவிட்டபடியால் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த
திரைப்பட படப்பிடிப்பைக்கூட பார்க்காமல் நேராக குரங்கு அருவிக்கு
விரைந்தோம்.செல்லும் வழியில் வனத்துறை சோதனை மற்றும் அனுமதி
மையத்தில் அனுமதிச்சீட்டு வாங்க வாகனத்தை வலப்புறமாக நிறுத்தினோம்.
உடனே கடமை உணர்வு நிறைந்த வனத்துறையினர் ஏன் இப்படி வண்டி
நிறுத்துகிறீர்கள் என அறிவுறுத்தினர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அனுமதிச்சீட்டு
பெற்று சென்றோம்.

ஆனால் அருவிக்கு சென்றபின்தான் வனத்துறையினரின் கடமையுணர்ச்சி என்
கண் கலங்க வைத்துவிட்டது??!!

குரங்கு அருவி தங்களை இனிதே வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை கண்டததும்
புரிந்தது வனத்துறையினரின் கடமையுணர்ச்சி.

அந்த அறிவிப்பு பலகை



நுழைவு மற்றும் பராமரிப்பு கட்டணமாக தலைக்கு 15 ரூபாய் (உடம்புக்கு கட்டணம்
இல்லை) வசூலிக்கும் வனத்துறை ஒரு அறிவிப்பு பலகையைக்கூட பராமரிப்பதில்லை.

அறிவிப்பும் நடப்பவையும்
  1. நுழைவுக்கட்டண அனுமதிச்சீட்டு இல்லாமல் உள்ளே செல்ல அனுமதியில்லை-ஆனால்அனுமதிச்சீட்டை பரிசோதிக்க அங்கு ஒருவரும் இல்லை.50% பேர் இலவசமாக நுழைகிறார்கள்
  2. மதுபானங்களை எடுத்துசெல்லவோ அருந்தவோ கூடாது-ஆமாம் யாரும் எடுத்துச்செல்வதில்லை, அங்கேயே அருந்துகிறார்கள்.
  3. பாலிதீன் பைகளை எடுத்துச்செல்லகூடாது-ஆமாம் யாரும் எடுத்துச்செல்வதில்லை, அங்கேயே போட்டு விடுகிறார்கள்.
  4. தீயினைத்தூண்டும் பொருட்களை எடுத்துச்செல்லகூடாது-அதையும் அங்கேயே போட்டு விடுகிறார்கள்.
  5. எண்ணை தேய்த்து குளிக்ககூடாது-அப்புறம் அப்படியேவா வீட்டுக்கு போவார்கள்.
  6. குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்காதீர்கள்-யாரும் கொடுப்பதில்லை கீழேதான் போடுகிறார்கள்.
  7. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படிமேலே கூறியவற்றை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கபடும்-அப்படியா????? சொல்லவே..... இல்ல...... அப்படின்னா இதை பாதுகாக்காத வனத்துறையினருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கொடுப்பார்கள்????
அறிவிப்பு பலகையின் அனைத்து அறிவிப்புகளையும் மீறியவர்கள்.இவர்களுக்கு என்ன தண்டனை.?!!
ஆனால் அங்கு குப்பைத்தொட்டி இல்லையே........!!


அருவிக்காட்சி .வீடியோவாக பார்க்க இங்கே க்கிளிக்கவும்

அருவிக்கருகில் கிடந்த குப்பை , மதுபாட்டில் மற்றும் அருவிக்காட்சி


வீடியோவாக பார்க்க இங்கே க்கிளிக்கவும்http://www.youtube.com/watch?v=_EIVGkb74cM

தன்அழகை சோதிக்கும் வானரம்

வாகனங்களை சொந்தம் கொண்டாடும் வானரங்கள்.
மாருதியின் மேல் ஒரு குட்டி மாருததி.



இந்த விழுது முன்பு ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது , இப்பொழுது கீழே விழுந்து கிடக்கிறது
.
நம் முன்னோர் ஆலோசனையில்
நாங்கள் ஆலோசனையில்



இங்கே பெண்களுக்கு தனியக குளிக்கும் பகுதி இல்லை, பாதுகாப்பு இல்லை, உடை மாற்றும் அறை தற்போது உறை மாட்டும் (condom)அறையாக காட்சி அளிக்கிறது. சுகாதார வளாகம் சுமாராக கூட இல்லை.

இவ்வளவு இல்லைகள் இருப்பினும் இயற்கை விரும்பிகளுக்கு கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


---கி.கி



Share/Bookmark

10 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

I too went this Monkey Falls in my First Year IV trip..

ஷங்கி said...

நல்லாருக்குங்க!

Nathanjagk said...

ஒரு தெளிவான ​கைட் மாதிரி எழுதியிருக்கீங்க! குரங்கு அருவி உங்களை வாழ்த்தும்! ஆனா இந்த வன இலாகாகாரர்கள் இவ்வளவு ​மோசமாவா இருப்பாங்க? ​​ஷேம்.. ​ஷேம் மங்கி ஷேம்! கடைசி வரைக்கும் குரங்கு அருவிக்கு விஸிட் ​போன 'குட்டி' யாருன்னு ​சொல்லவேயில்லையே?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
I too went this Monkey Falls in my First Year IV trip..\\

அப்போதும் இப்படித்தான் இருந்ததா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//சங்கா said...
நல்லாருக்குங்க!\\


நன்றிங்க!

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பகிர்வு கிறுக்கன்

Beski said...

//நம் முன்னோர் ஆலோசனையில்
நாங்கள் ஆலோசனையில்//

டாப்பு...

Unknown said...

தல..

படமெல்லாம் மெரட்டல்..

மொத்தத்துல சூப்பர்..!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன் said...
ஒரு தெளிவான ​கைட் மாதிரி எழுதியிருக்கீங்க! குரங்கு அருவி உங்களை வாழ்த்தும்!\\

நன்றி அப்போ எனக்கு அடுத்த வேலை ரெடி

// ஆனா இந்த வன இலாகாகாரர்கள் இவ்வளவு ​மோசமாவா இருப்பாங்க? ​​ஷேம்.. ​ஷேம் மங்கி ஷேம்!\\

எல்லோரும் மோசமில்லை

// கடைசி வரைக்கும் குரங்கு அருவிக்கு விஸிட் ​போன 'குட்டி' யாருன்னு ​சொல்லவேயில்லையே\\

பக்கத்தில மனைவி இருக்கா, அப்புறமா சொல்றேன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
நல்ல பகிர்வு கிறுக்கன்\\

நன்றி