சண்டை வராமலிருக்க ஒரே வழி

போனதடவ மச்சான் சக்கரை அட்வைஸ்+தத்துவ மழையில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனா நமக்குத்தான் ஒரு எழவும் புரியல. பதிவுலக வரலாறு தெரிஞ்சாத்தான் இவங்களோட பேனா சண்டை (பேனா முனை, கத்தி முனையை விடக் கூர்மையானது) புரியும் போல இருக்கு. புரியலன்னா போய்கிட்டே இருடா ஏனாவானான்னு(எவனோ ஒருவன், ஹி ஹி ஹி...) போய்கிட்டே இருந்தேன்.

இந்தத் தடவ பைத்தியக்காரனோட பதிவப் பார்த்தேன். சரி, நமக்கு இப்பவும் புரியாதுன்னு அப்படியே விட்டுருக்கனும். ஆபீஸ்ல, ஒரு வார புயலுக்குப் பின்னாடி, கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததால வந்த வினை. என்னடான்னு அலசிப் பார்த்தேன். தீபாவினுடைய பதிவு கிடச்சது. நல்லா காமெடியாத்தான் எழுதிருக்காங்க. பின்னூட்டமெல்லாம் படிச்சுப் பார்த்தேன். அப்பவும் என்ன மேட்டர்னு புரியல. அப்புறம் முரளிகண்ணனுடைய பதிவு கிடச்சது. அங்க இருந்து நர்சிம்மோட பதிவு. திரும்ப தீபாவோடதப் படிச்சிப் பார்த்தேன். நர்சிம்மோடத நல்லா காமெடி பண்ணின மாதிரி இருந்தது, ஆனா தப்பா எதுவுமே தோனலயே? இப்ப பின்னூட்டங்களைத் திரும்ப படிச்சுப் பார்த்தேன். அப்புறம் தீபாவினுடைய பதிவுகள். அடடா! நமக்குக்க் கூட புரியிற மாதிரி இருக்கே!

இப்ப நம்ம கன்குலூசனுக்கு வருவோம். அந்தப் பதிவுல எந்தத் தப்பும் இல்லன்னே தோனுது. ஆனா, யாரோ பின்னூட்டத்துல ஒரு திரியக் கொழுத்திப் போட, அது சிவகாசிப் பட்டாசாக வெடித்துச் சிதறிப் போய், சிலருடைய மறுபக்கங்களும் தெரிஞ்சுபோச்சு. ஆக இதுக்குக் காரணம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங். இதப் பாத்து மத்தவங்கள்லாம் உஷாரா இருந்துக்குங்க. பதிவுல எந்த அளவு கவனம் செலுத்துறீங்களோ, அதே அளவு பின்னூட்டத்துலயும் கவனம் செலுத்துங்க. கண்டிப்பா பின்னூட்ட அனுமதிய ஆன் பண்ணி வைய்ங்க. முடிஞ்சா பின்னூட்ட வசதியையே தூக்கிடுங்க. (நீ மட்டும் வச்சிருக்கியேன்னு கேக்கப்பிடாது. நாம தினமும் தூங்கும்போது பிரச்சனையையே பெட்சீட்டா போத்திட்டுத் தூங்குறவங்க, என்ன ஆனாலும் போய்கிட்டேர்ரா ஏனாஓனான்னு போய்கிட்டே இருப்போம்). அய்யய்யோ! பின்னூட்டம் போடாம மனசுலயே வச்சிருந்தா என்ன பண்ணுறது?

ஆக இதுக்கு ஒரே வழி, உங்களது கற்பனைக் குதிரையை கட்டிப்போட்டு வைப்பதுதான். யாராவது உங்களைப் பாராட்டுற மாதிரியோ, காமெடி பண்ற மாதிரியோ தோனுச்சுனா போய்கிட்டே இருங்க. அவமானப் படுத்துற மாதிரியோ, புண்படுத்துற மாதிரியோ(மனச) உங்க கற்பனைல தோனுச்சுனா, போனிலோ அல்லது நேரிலோ கேட்பதே நலம். எழுத்துக்கள் உங்களது மனதை அப்படியே பிரதிபலிக்காது. இவ்வளவு ஏன், போனில் பேசும்போது கூட தப்பாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. முக்கியமா, இந்த சமயத்துல, அடுத்தவங்க கருத்தக் கேக்கவே கூடாது, டேரக்டா நீங்களே டீல் பண்ணனும். பேச முயற்சித்து, அது தள்ளிப்போனால், அந்த கேப்புல இன்னும் கற்பனை வளரும். அந்த கேப்புல ஒன்னத்தியும் கற்பனை பண்ணாதீங்க, பேசுற வரை வெய்ட் பண்ணுங்க.

ஆகவே... (ஏண்டா பரதேசி, ஒரே வழின்னு சொல்லிட்டு நூறு வழி சொல்லுவ போல இருக்கு? நிறுத்தப் போறியா, இல்...) ஓக்கே ஓக்கே. அவ்வளவுதான்.

சரி போகட்டும். சும்மா இருக்குறது கூட சில நேரங்கள்ல பிரச்சனை ஆய்டுது. அத்தோட நிறுத்திருக்கலாம். மேல படிச்சேன். தீபாவோட இந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்துவிட்டது, இவங்க இப்படி சொல்லிருக்காவிட்டால், இவங்க எந்தத் தப்பும் பண்ணாதவங்கன்னு என்னால சொல்லிருக்க முடியும். இந்தப் பதிவிற்கு முன்பு வரை, இவர் சொன்னது எதுவும் தப்பில்லை.

புதிதாக இங்கு நுழைந்திருக்கும் நான், இங்கிருக்கும் நட்புகள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். இது போன்ற நட்புகள் எனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறேன். பின்னூட்டங்களில் வெண்பூ என்பவர் ‘ஒரு வேளை இந்த சண்டையே ஒரு விளம்பரத்திற்காகத்தான் செய்யப்பட்டது என்றால் நீங்கள் எல்லோருமே வென்று விட்டீர்கள்’ என்று கூறுவது அவர் உங்களுடைய நட்பின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இது போன்று நடப்பது எனது எண்ணங்களில் மீது உள்ள நம்பிக்கையைச் சிறிது குறைக்கிறது. எனக்கு என்னமோ பொழுது அழகாய்ப் புலர்ந்தது போலத் தெரியவில்லை.

நண்பர்களே, நண்பர்களாய் ஆகப்போகிறவர்களே... தயவு செய்து யார் மீதும் காண்டு வேனாம். காமெடியை காமெடியாகவே பார்ப்போம், ஏதும் தவறான கற்பனைகள் தோன்றினால் நேரடியாகப் பேசித் தீர்ப்போம். இப்படிப் பின்னூட்டங்களில் அல்ல.
---

மச்சான் சக்கரை சுரேஷ் லீவில் இருக்கிறார். இல்லையென்றால் போனதடவை போட்ட அட்வைஸ் பதிவை மீள்பதிவா போட்டுருப்பாரு.
---
இதுக்கு ‘பிரபல/மூத்த பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்று தலைப்பு வைக்கலாமென்றுதான் நினைத்தேன். ஆனால், தலைப்பைப் பார்த்தவுடனேயே ‘தலைகணம் பிடித்த தருதலை, தாறுமாறாக பிதற்றியிருக்கும்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவைக்க வாய்ப்பிருப்பதால் மாற்றிவிட்டேன் (இதற்கும் கற்பனையே காரணம்).
---
மச்சான் எழில் தளத்தை எதேட்சையாகப் பார்க்க நேர்ந்தது. கீழே ஒரு ஸ்கிரால் ஓடுகிறது, இப்படி:
அன்பர்களின் கனிவான கவனத்திற்கு..
இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகள் அனைத்தும் சொந்தக் கருத்துக்களே. பதிவர்களின் பின்னூட்டங்கள் அனைத்தும் அவரவர் சொந்தக் கருத்துக்களே.
- உஷாராத்தான்யா இருக்காய்ங்க.
---

Share/Bookmark

12 ஊக்கங்கள்:

தினேஷ் said...

டெரருங்கோ ... எத்தனை பேரு தான் நாட்டாமை பதிவ போடுவாங்க ஒரு சண்டைக்கு நீங்களும் இப்போ..

சைக்கிள் கேப்புள ஆட்டோ ஓட்ட கேள்விபட்டிருக்கிறேன். ஆனா நீங்க மற்றும் சிலர் இல்ல பலர் யானைய கொண்டாந்து நிப்பாட்டுறியலே..

ரவி said...

:))))))))

Unknown said...

மாப்பு, நீங்க எள ரத்தம். இந்த மாதிரி சப்பை மேட்டருக்கெல்லாம் டென்சன் ஆகி, இவுங்களுக்கு புத்தி சொல்லி.. ஏன் உங்க நல்ல டயத்த வீணாக்கணும்? அதுக்கு பதிலா, வழக்கமான styleல நச்சுன்னு ஒரு நாலு பதிவ போட்டுட்டு ரசிக்க வைச்சுருக்கலாம். இதெல்லாம் passing clouds மாதிரி. பாத்தோமா, போனோமான்னு இருங்க, ஏன்னாக்கா நாளைக்கே யாராவது லூசுப் பய வந்து இந்த பதிவுக்கு பெரிய பிரகஸ்பதி மாதிரி "எதுக்கு எங்களுக்கு புத்தி சொல்ற? உன் வேலைய பாத்துட்டு போ..!" அப்படின்னு சொல்வான். பதிலுக்கு நமக்கு கடுப்பு ஏறும், நாமளும் நாலு வார்த்தைய விடுவோம். சண்டை உருமாறும். நாட்டாம பண்ண போன நம்மளுக்கு நாமத்த போட்றுவானுங்க..

என்னடா, ரொம்ப திட்றானேனு நினைக்கிறீங்களா? சொல்லணும்னு தோணுச்சு :) மத்தபடி குறை சொல்லணும்னு ஒண்ணும் எண்ணம் இல்ல..(நான் உங்க பதிவ என்னிக்கு குறை சொல்லிருக்கேன்??!!!) :)). இத நான் ஏன் சொல்றேன்னா, என்னோட தமிழ் வலைப்பூவுக்கு உயிரூட்டியது, நீங்கதான். அதான் இப்படி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம்.

// அன்பர்களின் கனிவான கவனத்திற்கு..
இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகள் அனைத்தும் சொந்தக் கருத்துக்களே. பதிவர்களின் பின்னூட்டங்கள் அனைத்தும் அவரவர் சொந்தக் கருத்துக்களே.
- உஷாராத்தான்யா இருக்காய்ங்க.
---//
உஷாரா இருந்தாதான பொழப்ப நடத்த முடியும். இதுதான் அசந்தா அண்ட்ராயர உருவுற கால்மாச்சே..!!

Beski said...

jothi commented on your story 'ஏதோ டாட் காம்: சண்டை வராமலிருக்க ஒரே வழி'

'உங்கள் பக்கம் திறக்க முடியவில்லை. அதுனால இங்கேயே,.. வர வர இது போன்று பதிவுகளை பார்க்கும் போது எரிச்சலாய் வருகிறது. எல்லாம் பிரபலம், பிரபலம்னு சொல்லிக்கிட்டு இவங்க பண்ற இம்சை தாங்க முடியல. நான் இதெல்லாம் முதல்ல தெரியாம பாலோயர் ஆயிருந்தேன். இப்ப இந்த ரெண்டு நாள் சண்டையில எல்லாருடைய ரூபமும் தெரிஞ்ச்சு போச்சு. போப்பா உன்னை பின்னும் தொடர வேணாம், ஊக்கும் தொடரவேணாம்னு எடுத்து விட்டுடேன். என்ன பண்றது,.. ஸ்கூலுக்கு போற பசங்கள வச்சிகிட்டு இப்படியா ஸ்கூல் பசங்ககளை விட கேவலமா நடந்துக்கிறது?? சொல்லப்போனா சில புதிய பதிவர்களின் பதிவுகள் அருமையா இருக்கு,.. அவைகள் கேட்பாரின்றி தமிழிஷில் பார்க்க முடிகிறது,..'

Beski said...

சூரியன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
---
//டெரருங்கோ ... //
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....
---
சொல்ல வந்தது புரிஞ்சா சரிதான்.

Beski said...

//செந்தழல் ரவி said...
:))))))))//
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி.
---
ஸ்மைலி மட்டும் பின்னூட்டமா போட்டுருக்காரே! இதுல ஏதும் உள்குத்து இருக்குமோ. (கற்பனையை நிறுத்துடா...) ஓக்கே ஒக்கே.

Beski said...

விரிவான கருத்துக்களுக்கு நன்றி எழில்.
---
இதுல நான் நாட்டாம பண்றதுக்கு எதுவும் இல்ல, பண்ணவும் கூடாது. இது எனது கருத்துக்கள் மட்டுமே.
சொல்ல வந்தது என்னன்னா, நாம இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, தவறான எண்ணங்கள் வந்தா, நேரடியா பேசி தீத்துக்கனும், அப்டிங்கிறதுதான்.
---
மக்களே, அத மட்டும் கருத்தா எடுத்து, அது சம்பந்தமா பின்னூட்டம் போடுங்க.
மிஸண்டர்ஸ்டேண்டிங் வராம இருக்க இன்னும் என்னென்ன வழிகள் உங்களுக்குத் தெரியுதோ அதச் சொல்லுங்க.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))

Beski said...

கருத்துக்களுக்கு நன்றி ஜோதி.
---
மேலும், தளத்தில் உள்ள பிரச்சனை பற்றி தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி.
இப்போது சிறிது மாற்றம் செய்துள்ளேன். பார்த்து சொல்லுவீர்கள் என நம்புகிறேன்.

Beski said...

வாங்க பித்தன்.
சிரிக்கிறீங்களா? ஓக்கே ஒக்கே.

வருகைக்கு நன்றி.

jothi said...

சரியாகி விட்டது. explorerல ஓப்பன் ஆகல. fire boxல ஓப்பன் ஆகுது. இப்பதான் வந்து பார்த்தேன். ஆலோசனைக்கு நன்றி.

எனக்கு உள்ள எரிச்சல் என்னவென்றால் நான் யாருடைய எழுத்துகளை எல்லாம் பார்த்து பிரமித்து நாமும் இப்படி எழுதணும்னு நினைச்சேனோ எல்லாம் சொல்லி வச்ச மாதிரி தூள் கிளப்பினாங்க, அடக்கடவுளே நீயுமா இப்படின்னு கிளம்பியாச்சு.

மத்தபடி நாம நம்ம வேளைய பாத்துக்கிட்டு பதிவ போட்டுகிட்டே இருப்போம். கண்டிப்பா இப்பதான் விழுதுகள் விழ ஆரம்பிச்சிருக்கு. அது இந்த பதிவுலக மண்ணை இன்னும் ஆழமா, அகலமா பற்றும். நல்லா தலைத்து நிற்போம். இளைப்பாற நினைக்கிற பறவைகள் இளைப்பாறி விட்டு போகட்டும். சீ நான் ஏன் உன் மரத்திற்கு வரணும்னு நினைக்கிற பறவைகள் பறந்து போகட்டும், ஆலமரத்திற்கொன்றும் நட்டமில்லை.

உங்க வீட்ல நீங்க ஆட்டோவும் ஓட்டலாம், ப்ளைட்டும் ஓட்டலாம். இடிச்சு தள்ளிக்கிட்டு போய்க்கிட்டே இருங்க,..

எல்லத்துக்குமே புதுசா வர்ர பதிவர்கள் இளக்காரம்தான். பாரதியாரே வந்து கவிதை எழுதினாலும் சுமார்னு மட்டம் தட்டுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க,..

Beski said...

ரொம்ப நன்றி ஜோதி, பார்த்துச் சொன்னதற்கு.
---
//எனக்கு உள்ள எரிச்சல் என்னவென்றால் நான் யாருடைய எழுத்துகளை எல்லாம் பார்த்து பிரமித்து நாமும் இப்படி எழுதணும்னு நினைச்சேனோ எல்லாம் சொல்லி வச்ச மாதிரி//
அதே.
---
//மத்தபடி நாம நம்ம வேளைய பாத்துக்கிட்டு பதிவ போட்டுகிட்டே...//
ஓக்கே.
---
ரொம்ப காட்டமா இருக்கீங்க போல...
இங்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, புதியவர்களுக்கு இந்த சண்டைகள் ஏதோ ஒரு எதிர்மறையான தாக்கத்தியே ஏற்படுத்துகிறது எனத் தெரிகிறது.