முதலில் கொஞ்சம் பயனுள்ள தகவல்கள்
1. கூகுல் மொழிமாற்றியில் (Google Translator) புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இணையதளப் பக்கத்தின் லிங்கை கொடுத்து, தேவைப்படும் மொழிகளில் இப்போது பார்த்துக்கொள்ளலாம். அடுத்து, முன்பு எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்தே மொழிமாற்றம் செய்து பார்க்க முடியும். இப்போது ஃபைலை அப்படியே அப்லோடு செய்து மொழிமாற்றம் செய்து பார்க்கலாம்.
2. இமெயில்களை எப்படி கையாளுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம் - http://gmail.com/tips
3. கூகுல் பாஸ்வேர்ட் ரெகவரியில் இப்போது எஸ்எம்எஸ் மூலம் பாஸ்வேர்டை மீட்டுக்கொள்ளும் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களது அக்கவுண்டில் முன்னமே மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.ஒருவர் இதைப் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறார்.
4. இப்போது ஜிமெயிலில் ஃபைல் அட்டாச் பண்ணும் அதிகபட்ச அளவு 10MB யிலிருந்து 25MB ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 10MBக்கு மேலே உள்ள ஃபைல்களை அனுப்ப http://yousendit.com தளத்தையே பயன்படுத்தினேன்.
5. ஜிமெயிலில் லேபில்கள் வந்தது ஏற்கனவே தெரியும். இப்போது மெயில்களை அதற்குள் இழுத்துப் போடும் வசதி (Drag and Drop) சேர்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட யாஹூவின் அனைத்து வசதிகளும் இங்கு வந்துவிட்டன.
6. Gmail, Google Calendar, Google Docs இவையனைத்தும் BETA வெர்சனிலிருந்து வெளியே வந்துவிட்டன (Gmail 2004ல் ஆரம்பிக்கப்பட்டது).
7. Google Chrome OS - 2010 ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. கூகுல் இமேஜ் தேடுதலில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆபாசமான படங்கள் தேடுதலில் வராமல் இருக்க ஆப்சன் உள்ளது, அதையும் மீறி வரும் படங்கள் பற்றி ரிப்போர்ட் பண்ணவும் ஆப்சன் இருக்கிறது. (இது போன்ற படங்களையே தேடுவோர், இதைப் படிக்காமல் விட்டுவிடலாம்)
9. வரும் 22ம் தேதி, சூரிய கிரகணம் - சுனாமி வர வாய்ப்புள்ளது என, ஜோதிடர் ‘நம்புங்கள்’ நாராயணன் கணித்துள்ளார். இவர் பெயரைக் கேட்டவுடனேயே நம்பிக்கை போய்விட்டது. (டெக்னாலஜி பத்தி மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா?)
---
படிப்பு
போன வாரம், திநகர் GLM மொட்டைமாடியில், நண்பனுடன் ஒரு பீரைப் போட்டுவிட்டு வரும்வழியில் சிகரெட் வாங்குவதற்கு (ஏய், நானும் குடிகாரந்தான், நானும் குடிகாரந்தான்) ஒரு கடையில் நின்றோம். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அங்கே இருந்தான்.
ரெண்டு கிங்ஸ்பா
வேறண்ணா?
அவ்ளோதான்.... படிக்கிறியாப்பா?
என்ன?
ஸ்கூலுக்குப் போறியானு கேட்டேன்
அவன் அப்படியே பக்கத்தில் இருந்தவரைப் பார்த்து இளித்தான். அவனது அப்பாவா இருக்கும். அவர் கேட்டார்
என்ன?
படிக்கிறானானு கேட்டேன்
’படிச்சாச்சு படிச்சாச்சு’
எதிர்பார்க்காத பதில். அந்த வார்த்தைகளில் எவ்ளோ அர்த்தம் இருக்கு பாருங்க.
---
எதிர்பார்க்காத பதில்
நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது வந்த இதே போன்ற எதிர்பார்க்காத பதில்
சாப்டீங்களாண்ணே?
சாப்டிருப்பேன்!
!?!?!?...............
வித்தியாசமா இருக்குள்ள பதில்?
நல்லா கிளம்பிருக்கீங்கய்யா... சாப்டீங்களான்னு கேட்டது ஒரு குத்தமா?
---
கடைசியா ஒரு மொக்கை
(அப்போ இவ்ளோ நேரம் போட்டது மொக்கை இல்லையா?)
எல்லாம் மொக்கைதான், இதான் கடைசி மொக்கைனு சொல்ல வந்தேன், இது மெயிலில் வந்தது...
(ரைட்டு விடு)
Sardar's letter to Bill Gates:
Dear Mr.Bill Gates, We have bought a computer for our home and we have found some problems which i want to bring to your notice:
1. There is a button "Start" But there is no stop button.
2. Is there any "Re-Scooter" is available in system? i find only "Re-Cycle", coz i own only a scooter.
3. My son learnt "Microsoft Word", now he wants to learn "Microsoft Sentence", when will you provide that.
4. There is "Microsoft Office", what about "Microsoft Home", since i use this at home only.
1 personal question:
How is that your name is Gates, but you are selling "windows"?
Awaiting reply.
---
நல்லா படிச்சிட்டு சாவுங்கடா(டி).
-ஏனாஓனா.
10 ஊக்கங்கள்:
//எதிர்பார்க்காத பதில்
நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது வந்த இதே போன்ற எதிர்பார்க்காத பதில்
சாப்டீங்களாண்ணே?
சாப்டிருப்பேன்!
!?!?!?...............
வித்தியாசமா இருக்குள்ள பதில்?
நல்லா கிளம்பிருக்கீங்கய்யா... சாப்டீங்களான்னு கேட்டது ஒரு குத்தமா?\\
தம்பி இது என்னை குத்தற மாதிரி இருக்கு.
//தம்பி இது என்னை குத்தற மாதிரி இருக்கு.//
குத்துற ‘மாதிரி’ இல்ல, உங்களத்தான் டைரைக்ட்டானு இங்க சொல்லிக்க ஆசப்படுறேன்.
நல்லா இருந்திருக்கும்
//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இருந்திருக்கும்//
ஆஹ்ஹா.... கிளம்பிட்டாங்களே!
நல்ல தகவல் நன்றி
இதுல இரண்டு பேர் எழுதறீங்களா ..கொஞ்சம் கன்பியுஸ் ஆகிட்டேன் :-)
/நல்ல தகவல் நன்றி //
உங்க தகவல்கள் கூட நல்லாயிருக்கு.
//இதுல இரண்டு பேர் எழுதறீங்களா ..//
ஆமா... கடைசில பேரப் போட்டுருப்போம்.
---
வருகைக்கு நன்றி கிரி அண்ணே!
நல்லாயிருக்கு பிரதாப்
நன்றி ஆதவன்.
எவனோ ஒருவன், உங்களுக்கு சுவாரசியமான வலைப்பதிவு விருது குடுத்திருக்கேன். http://wimpystar.blogspot.com/2009/07/1_16.html
ஏற்றுக் கொள்வீர்களென்று நினைக்கிறேன்!
நன்றி
சங்கா
சங்காண்ணே.... தாமதத்திற்கு மன்னிக்கனும்.
ரொம்ப ரொம்ப நன்றி.
கூடிய சீக்கிரம் இத சுத்துல விட்டுருவேன். இப்போதைக்கு நேரமில்ல. தப்பா நினைக்க வேணாம்.
மீண்டும் நன்றி.
Post a Comment