புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.

காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark

17 ஊக்கங்கள்:

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க நம்ம தளத்துக்கு

jothi said...

//நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.//

அதனாலதான் எவனோ ஒருவன்னு வச்சிட்டிங்க்களோ, இருந்தாலும் காதல் தோல்வி என நினைக்கும் போது மட்டும் மனசு வேதனையடைகிறது. அதெப்படி பெண்கள் காதலிலும் ஜெயிக்கிறார்கள், கல்யாணத்திலும் ஜெயிக்கிறார்கள்.??

jothi said...

அட்டகாசம் நண்பரே. ரெண்டு மாதத்தில் 48 பதிவுகளா? ஏதாவது செய்யணும் போல இருக்கே,..

எழில். ரா said...

மாப்பு... மனசில உள்ளத கொட்டீடிங்க.. நல்லது..நல்ல தாராமும் தோழியாய் அமைய வாழ்த்துக்கள்..!

நன்றி,
எழில்.ரா

Beski said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே//
ஆமா... அதெல்லாம் அனைஞ்சும் போச்சு.

Beski said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாங்க நம்ம தளத்துக்கு//
வந்துட்டேன்....
நன்றி ஸ்டார்ஜன்.

Beski said...

//அதனாலதான் எவனோ ஒருவன்னு வச்சிட்டிங்க்களோ, //
ஹி ஹி ஹி...

//காதல் தோல்வி என நினைக்கும் போது மட்டும் மனசு வேதனையடைகிறது.//
விடுங்க பாஸி, எல்லார் வாழ்க்கையிலும் நடக்குறதுதான...

//அதெப்படி பெண்கள் காதலிலும் ஜெயிக்கிறார்கள், கல்யாணத்திலும் ஜெயிக்கிறார்கள்.??//
அது அவர்களுக்குக் கடவுள் கொடுத்த வரமோ? பெண்களின் மனது புரியாத புதிர்தான். பெண்மை என்றால் மென்மை என்கிறோம், ஆனால் எப்படித்தான் எல்லாத்தையும் சமாளிச்சுப் போறாங்களோ தெரியல.

Beski said...

//அட்டகாசம் நண்பரே. ரெண்டு மாதத்தில் 48 பதிவுகளா? ஏதாவது செய்யணும் போல இருக்கே,..//

எனது நண்பருமிங்கே எழுதுகிறார், அதையும் மனதில் வைத்துக்கொள்ளூங்கள். எனது பங்கு 44தான்.
ஏற்கனவே ஒருத்தர் அவார்டு கொடுத்திருக்கிறார், என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Beski said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜோதி.

Beski said...

//எழில். ரா said...
மாப்பு... மனசில உள்ளத கொட்டீடிங்க.. நல்லது..நல்ல தாராமும் தோழியாய் அமைய வாழ்த்துக்கள்..!//

நன்றி எழில்.

Nathanjagk said...

அண்ணன் சங்கா - ​ரெகுலர் கஸ்டமர் நெம்பர்:2 ​சொல்றது என்னன்னா..:
நாங்கள் வேண்டுவது​மொக்கை மற்றும் மொக்கை மட்டுமே;​மொக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. Interesting Blogger Award வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்!

jothi said...

..பெண்மை என்றால் மென்மை என்கிறோம், ஆனால் எப்படித்தான் எல்லாத்தையும் சமாளிச்சுப் போறாங்களோ தெரியல.//

கரக்கிட்டுதான். அவுங்க புல்லு மாதிரி மென்மையானவர்கள். புயல் காத்தில் தப்பித்துவிடுவார்கள். தென்னைமரமான நாம்தான் சாய்ந்துகிடக்கிறோம். வெளியில தென்னைமரம்தான் பெர்சுன்னு வேற பேசிக்கிறாய்ங்க,.

jothi said...

எவனோ ஒருவன், உங்களின் பள்ளி நாட்களை பகிர்ந்து கொள்ளும் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கின்றேன். நேரம் கிடைத்தால் பதிவிடுங்கள்.

Beski said...

//அவுங்க புல்லு மாதிரி மென்மையானவர்கள். புயல் காத்தில் தப்பித்துவிடுவார்கள். தென்னைமரமான நாம்தான் சாய்ந்துகிடக்கிறோம்.//
சூப்பரா சொல்லிருக்கீங்க ஜோதி.

//தென்னைமரம்தான் பெர்சுன்னு வேற பேசிக்கிறாய்ங்க,.//
என்னதான் இருந்தாலும் ஆண்பிள்ளை இல்லையா? (கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாம விழுவோம்ல... மண்ணு பட்டாலும் காட்ட்க்க மாட்டோம்ல...)

Beski said...

/உங்களின் பள்ளி நாட்களை பகிர்ந்து கொள்ளும் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கின்றேன். நேரம் கிடைத்தால் பதிவிடுங்கள்.//
நன்றி ஜோதி.
கண்டிப்பாக எழுதுவேன், இப்போது முடியாது, அடுத்த வாரம் வெட்டியா இருக்கும்போது எழுதுறேன்.

Beski said...

/சொல்றது என்னன்னா..:
நாங்கள் வேண்டுவது​மொக்கை மற்றும் மொக்கை மட்டுமே;​மொக்கையைத் தவிர வேறொன்றுமில்லை.//
மொக்கை சங்க உறுப்பினருக்கு நன்றி.

//Interesting Blogger Award வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி. நாம என்ன அவ்வளவு இண்ட்ரஸ்டிங்காவா எழுதுறோம்னு நானும் என்னோடத படிச்சு படிச்சுப் பாத்தேன். அப்புறம் அவரோடதையும் திரும்ப படிச்சு பாத்தேன், லிங்க் எல்லாம் கரெக்டா நமக்குத்தான் குடுத்துருக்காரு... ரைட்டு. இப்போ நீங்களும் அதை கன்பார்ம் பண்ணிட்டீங்க...

விரைவில் அது பற்றி, உங்க ஆசைப்படி மொக்கையா ஒன்னு போடுறேன்.