பள்ளிக்கூடம்

அன்பர் ஜோதி அவர்கள் தொடக்கப்பள்ளி தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். நன்றி ஜோதி. உண்மையை சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் சில மட்டுமே ஞாபகம் இருக்கின்றன. ஆயினும் நினைவில் நிற்பவை யாவுமே பசுமை என்னும் சொல்லை ஞாபகப்படுத்தும் விதமாகவே உள்ளன.

எழுத ஆரம்பித்த புதிதில், என்னதான் எழுதுவது என தினமும் யோசித்துக்கொண்டே இருப்பேன். ’எவ்வளவுதான் எழுத முடியும் நம்மால்?’ என்ற கேள்வியும் உண்டு. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அதைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை போலிருக்கிறது. தொடர் தொடர் என்று தொடர்ந்து அழைப்பு. இது போதாதென்று அழைக்காமலேயே ஆளாளுக்கு பத்து பத்தாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் ’எதைப் பற்றி என்ற கவலை இனி இல்லை எங்களுக்கு’, என விளம்பரத் தோரனையில் மொத்தமாக நின்று சொல்லிக்கொள்ளலாம் போலிருக்கிறது.
இனி மேட்டருக்கு வருவோம்...
---
காக்கி டிராயரும் வெள்ளை சட்டையும்தான் பசங்க. நீல நிற தாவனி பாவாடை, வெள்ளை சட்டை பொண்ணுக. தொடக்கப் பள்ளியில் பொம்பளப் புள்ளயலப் பத்தி பேச ஒன்னுமே இல்ல. இது பூரா நம்மளப் பத்திதான்.
பள்ளி செல்வதற்கு முரண்டு பிடித்ததாய் ஞாபகம் இல்லை. ஆனால் காலையிலேயே எந்திரிக்கத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். பள்ளி நாட்களில், காலையில் எழுப்பும்போது கண்ணைத் திறக்க முடியாது. ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏந்தான் தூக்கமே வரலையோ தெரியல. ஒரு வழியா எழுந்து, குளித்து ஒரு ஜோல்னாப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு ஒரு நடை. வீட்டிற்கு அருகிலேயே பள்ளி. அந்த ஜோல்னாப் பையைத் தலையில் மாட்டிக்கொள்வோம். அப்போதெல்லாம் தோளில் மாட்டும் பை இருந்ததாய் ஞாபகம் இல்லை. இந்த ஜோல்னாப் பையையே, தோள்கள் வழியே விட்டு, தலை வழியே ஒரு வழியாகத் தூக்கி, முதுகுக்குப் பின்புறம் வருமாறு மாட்டிச் செல்வது அன்று ஃபேசன். வசதியான வீட்டுப் பிள்ளைகள் சிலர், வெள்ளை உலோகத்தினாலான பெட்டியைக் கொண்டுவருவர். அதற்காக மிகவும் ஏங்கி, அடம்பிடித்து வாங்கி, பின், ஜோல்னாப்பை போல சௌகரியம் இல்லாதது கண்டு, பெட்டி கிடப்பில் போடப்பட்டு ஏச்சு வாங்கியது தனிக்கதை.

வீடு அருகில் இருப்பதால் மதியம் வீட்டிற்கு சென்றுதான் சாப்பாடு. ஆயினும், பள்ளியில் வழங்கும் சத்துணவு சாப்பிட முகவும் ஆசைப்படுவேன். அந்த பருப்பு சாம்பார் சுவை இன்னும் என் மூக்கிலேயே இருக்கிறது. நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவதும், அது பிடித்ததற்கு ஒரு காரணமாய் இருக்கலாம். மாதம் ஒரு முறை போடும் முட்டைக்கு தவறாமல் க்யூவில் நின்று, வாங்கியவுடன் நைசாக வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவேன்.

சாப்பாடு முடிந்ததும், மதியம் ஒரு அரைமணி நேரம் கேப் கிடைக்கும். அதுதான் ஒரு நாளில் முகவும் விரும்பி எதிபார்த்து காத்துக்கிடக்கும் நேரம். பள்ளி மைதானத்தில் ஒரே விளையாட்டுதான். இதுதான் விளையாடுவோம் என்றில்லை. நாங்கள் விளையாண்ட பல விளையாட்டுக்கள் பள்ளியில் தடை செய்யப்பட்டன. கோலிக்காய், குச்சிகம்பு, சிகரெட் அட்டை, உப்புமூட்டை சண்டை - இதெல்லாம் எங்களால் பள்ளிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள்.

அவற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட...
(தொடரும்)
---
ஏனாஓனா.

Share/Bookmark

24 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீல நிறத் தாவனி, வெள்ளை சட்டை பொண்ணுக.//
கவுண்டர் : பாத்தியாடா நாராயணா.. இவர் படிச்சது தொடக்கப் பள்ளி ஆனா எழுதறது தாவணி பத்தி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வெள்ளை உலோகத்தினாலான பெட்டியைக் கொண்டுவருவர்//

அண்ணா எந்தக்காலத்தில படிச்சீங்க?

Beski said...

//கவுண்டர் : பாத்தியாடா நாராயணா.. இவர் படிச்சது தொடக்கப் பள்ளி ஆனா எழுதறது தாவணி பத்தி..//

வடிவேலு: என்னாதிது? அதான் நம்ம பயபுள்ள தெளிவா அதப் பத்தி ஒன்னுந்தெரியாதுன்னு சொல்லிருக்கான்ல... அப்பொறொ நீ எதுக்கு கெளறுற?

Beski said...

//அண்ணா எந்தக்காலத்தில படிச்சீங்க?//
அட, உங்களுக்குப் பின்னாலதான் நானெல்லாம். எனது காலத்திலும் இதெல்லாம் உண்டு. நீங்க எந்த அர்த்தத்துல சொல்றீங்க?

jothi said...

//ஆயினும் நினைவில் நிற்பவை யாவுமே பசுமை என்னும் சொல்லை ஞாபகப்படுத்தும் விதமாகவே உள்ளன//.

அதிர்ஷ்டம்

jothi said...

//காக்கி டிராயரும் வெள்ளை சட்டையும்தான் பசங்க. நீல நிறத் தாவனி, வெள்ளை சட்டை பொண்ணுக.//

ஐ, காக்கி எங்க ஸ்கூலு, நீல நிறம் பக்கத்து ஸ்கூலு

jothi said...

//ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏந்தான் தூக்கமே வரலையோ தெரியல. //

கண்ணாடி

jothi said...

/இந்த ஜோல்னாப் பையையே, தோள்கள் வழியே விட்டு, தலை வழியே ஒரு வழியாகத் தூக்கி, முதுகுக்குப் பின்புறம் வருமாறு மாட்டிச் செல்வது அன்று ஃபேசன்.//

அருமையான ஞாபக சக்தி, அப்படி மாட்டியவுடன் ஒரு சின்ன தெனாவெட்டு வந்து உட்கார்ந்து கொள்ளும்

jothi said...

//அடம்பிடித்து வாங்கி, பின், ஜோல்னாப்பை போல சௌகரியம் இல்லாதது கண்டு, பெட்டி கிடப்பில் போடப்பட்டு ஏச்சு வாங்கியது தனிக்கதை.//

100 ரூபா கைலியில இருக்குற வசதி,1000 ரூபா பேண்ட்ல இருக்குமா??

jothi said...

//கோலிக்காய், குச்சிகம்பு, சிகரெட் அட்டை, உப்புமூட்டை சண்டை//

எரி பந்து, செவன் ஸ்டோன்லாம் இல்லையா??

jothi said...

அருமை எவனோ ஒருவன்,.. உங்கள் அட்டகாசமான பதிவை தொடருங்கள்

Unknown said...

மாப்பு, சுவாரசியமா இருக்கு.. மேல தொடருங்க..

//கோலிக்காய், குச்சிகம்பு, சிகரெட் அட்டை, உப்புமூட்டை சண்டை - இதெல்லாம் எங்களால் பள்ளிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள்.//
சின்ன வயசுலயே டெர்ரரா இருந்திருக்கீயளே..! ஹூம்.. நட்த்துங்க :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உப்பு மூட்ட சண்ட ??? புரியலியே!!!

Beski said...

//அதிர்ஷ்டம்//
தங்களுடைய பதிவு பார்த்தேன். உண்மையிலேயே இது அதிஷ்டம்தான்.

//நீல நிறம் பக்கத்து ஸ்கூலு//
அப்போ மதிய நேரத்துல கொஞ்சம் குஜாலா இருந்துருக்குமே!

//கண்ணாடி//
ஹி ஹி ஹி...

//அப்படி மாட்டியவுடன் ஒரு சின்ன தெனாவெட்டு வந்து உட்கார்ந்து கொள்ளும்//
அங்கயுமா?

//100 ரூபா கைலியில இருக்குற வசதி,1000 ரூபா பேண்ட்ல இருக்குமா??//
:)))))
இது எப்படிப் பாத்தாலும் பொருந்துது...

//எரி பந்து, செவன் ஸ்டோன்லாம் இல்லையா??//
அட அதையெல்லாம் விட்டுட்டேனே... எறிபந்தும் இந்த லிஸ்டில் உண்டு.

//அருமை எவனோ ஒருவன்,.. உங்கள் அட்டகாசமான பதிவை தொடருங்கள்//
நன்றி ஜோதி.

Beski said...

/மாப்பு, சுவாரசியமா இருக்கு.. மேல தொடருங்க..//
ரைட்டு மச்சான்.

//சின்ன வயசுலயே டெர்ரரா இருந்திருக்கீயளே..!//
நாம மட்டும் எப்படியாம்? பசங்க படம் மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒரு அடாவடி சிறுவன் இருந்திருப்பான்.
---
நன்றி எழில்.

Beski said...

//கிறுக்கல் கிறுக்கன் said...
உப்பு மூட்ட சண்ட ??? புரியலியே!!!//

அதான் தொடரும்னு போட்டுருக்கோம்ல... வெய்ட் பண்ணுங்க, அடுத்து அத பத்திதான்.

சிநேகிதன் அக்பர் said...

நல்லா இருக்கு உங்கள் அனுபவங்கள்

Beski said...

//அக்பர் said...
நல்லா இருக்கு உங்கள் அனுபவங்கள்//
வருகைக்கு நன்றி அக்பர்.
---
சின்ன வயசுல பண்ண எல்லாமே நல்லாத்தான் இருக்கும், அடி வாங்குனது உட்பட.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வடிவேலு: என்னாதிது? அதான் நம்ம பயபுள்ள தெளிவா அதப் பத்தி ஒன்னுந்தெரியாதுன்னு சொல்லிருக்கான்ல... அப்பொறொ நீ எதுக்கு கெளறுற? //

கவுண்டர் : என்னது ? ஒன்னும் தெரியாதா ? ஏன்டா கரிசட்டி தலையா .. பையன் படிக்க போனது ஒண்ணாவது ஆனா பாத்தது தாவணியா? என்னடா குழப்புறீங்க?

Beski said...

//கவுண்டர் : என்னது ? ஒன்னும் தெரியாதா ? ஏன்டா கரிசட்டி தலையா .. பையன் படிக்க போனது ஒண்ணாவது ஆனா பாத்தது தாவணியா? என்னடா குழப்புறீங்க?//

வடிவேலு: யூனிபாம் கலரச் சொன்னது ஒரு குத்தமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

jothi said...

//.. பையன் படிக்க போனது ஒண்ணாவது ஆனா பாத்தது தாவணியா? //

சார் 17 வயசுலதான் ஒண்ணாவது போய்ருபாரோ??

இல்ல, ஒன்னாவது படிக்கும்போதே 17 வயசுப்பொண்ணை பார்த்தாரோ??

Beski said...

//jothi said...
சார் 17 வயசுலதான் ஒண்ணாவது போய்ருபாரோ??

இல்ல, ஒன்னாவது படிக்கும்போதே 17 வயசுப்பொண்ணை பார்த்தாரோ??//

ஒண்ணாவது படிக்கும்போது 17 வயசுப் பொண்ண பாத்தது உண்மைதான். ஆனா அப்போ பாத்ததும் இப்போ நெனைக்கிறதும் ஒண்ணாவா இருக்கு?

இதையே நா அப்போ சொல்லிருந்தேன்னா இப்படியெல்லாம் கேட்டுருப்பீங்களா? அந்த அக்கா ஜட நல்லா இருக்குடானு போய்கிட்டே இருந்துருப்பீங்க...

Nathanjagk said...

ஜோல்னாபையிலிருந்து அலுமினிய டப்பாவுக்கு பிரமோஷன் வாங்கியிருப்பீங்க போலு! சமத்து! நமக்கு எப்பயும் ஜோல்னா! விளையாட்டுகள பத்தி எழுதும் போது புதுசா ஒரு ​கை ​மொளச்சிக்கும் ​போல!! அன்பும் வாழ்த்தும்!!! கலக்குடா மாப்ள!

Beski said...

//ஜெகநாதன் said...
ஜோல்னாபையிலிருந்து அலுமினிய டப்பாவுக்கு பிரமோஷன் வாங்கியிருப்பீங்க போலு! சமத்து! நமக்கு எப்பயும் ஜோல்னா! விளையாட்டுகள பத்தி எழுதும் போது புதுசா ஒரு ​கை ​மொளச்சிக்கும் ​போல!! அன்பும் வாழ்த்தும்!!! கலக்குடா மாப்ள!//

ஆனா ஜோல்னாப்பைதான் நல்ல வசதி, தோள்ல மாட்டிக்கிட்டு ஓடலாம், குதிக்கலாம். ரெண்டு கையும் ஃப்ரீயா இருக்கும்ல?

நன்றி மாம்ஸ்.