+2 கவிதைகள் - தைரியமாயிரு

அன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ மண்ணைப்
பார்த்தாய்.

நேற்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ என்னைப்
பார்த்தாய்.

இன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ உன்னையே
பார்க்கிறாய்.

பெண்ணே
மிரளாதே
காதலுக்கு
ஜாதி மதம் இல்லை.

நாளை
நான் உன்னைப்
பார்க்கும் போது
தைரியமாக நீ
என்னைப் பார்.

இதுவே வழியென
நாளைய உலகம்
நம்மைப் பார்க்கும்.

Share/Bookmark

5 ஊக்கங்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லாயிருக்கு ..

rekha said...

intha kavithai 90% mark poduvain...... super..............

Beski said...

அட ரேகா...
இது ஏதோ +2 படிக்கும்போது கிறுக்கியது. 90 மார்க்கா!

ரொம்ப ரொம்ப நன்றி.
---
இந்த கவிதைக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்போல இருக்கே?!

Anonymous said...

nice

Beski said...

நன்றி அனானி அவர்களே.

//குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லாயிருக்கு ..//
நன்றி ராஜ். (மன்னிக்கனும், அப்போ விட்டுப் போச்சு.)