பாபநாசம் அருகே உள்ள வீ.கே.புரத்திற்கு ஒரு திருமணத்திற்கு சென்றபோது க்ளிக்கியவை.
சர்ச் மிகவும் அருமை. அருமை என்று சொன்னது அது அமைந்த இடம். அமைதியான சுற்றுப்புரம், சுற்றி சிறிய மலைக் குன்றுகள், இயற்கையான, சுத்தமான காற்று, பெரிய பெரிய மரங்கள், பறவைகளின் சத்தங்கள். தியானம் தேடி கோவிலுக்குச் செல்வோருக்கு சிறந்த இடம்.
சர்ச்க்கு அருகிலிருக்கும் கல்வாரி மலை அனைவரையும் கவரும். மலை மேலே ஏற படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது, பக்கத்திலேயே கைப்பிடியும். ஏறும் போது சற்றே திகில் ஏற்படும். மேலிருந்து பார்க்க அருமையாக இருக்கிறது.
அடுத்து, பாபநாசம்; குடும்பத்துடன் சென்று மகிழ அருமையான இடம். சில குடும்பங்கள் கூட்டமாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தது பார்க்க அருமையாக இருந்தது. அடிக்கிற வெயிலுக்கு தண்ணிக்குள்ளேயே இருந்துவிடலாம் போல இருந்தது.
அதற்கும் மேலே அகத்தியர் அருவி; அதற்கும் மேலே காரையார் அணை இருக்கிறதாம். ஆனால் செல்லவில்லை.
6 ஊக்கங்கள்:
புகைப்படங்கள் அருமை நண்பரே.
பாபநாசம் அருவி எனக்கு மிகவும் பிடித்தது.
முடிந்தால் நேரில் சந்தித்து பேசுவோம் ஒரு நாள்.
கண்டிப்பாக... எதிர்பார்க்கிறேன்...
தலைவா,இந்த சர்ச் எங்க இருக்குன்னு சொல்லுங்க.
ஊருக்கு போகும்போது கண்டிப்பா போய் பார்க்கணும்.
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில், பாபநாசத்துக்கு சிறிது முன்னால், அம்பலவாணபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், இந்த சர்ச்க்கு செல்லலாம்.
ஓக்கேயா துபாய் ராஜா?
"அம்பலவாணபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், இந்த சர்ச்க்கு செல்லலாம்"
தகவலுக்கு நன்றி.நான் நினைச்சது சரிதான்.இது இருதயகுளம் பள்ளி சர்ச்.
இந்த ஸ்டாப்பை ’அமலி ஸ்கூல் ஸ்டாப்’ என்றும் சொல்வார்கள்.
சரிதானே?
Post a Comment