தல போல வருமா ஹோய் ஹோய் தல போல வருமா..!
இதிலே வால் பின்னூட்டம்:
உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!
இதைப்பார்த்தவுடன் தோன்றியது...
ராஜ நடை
உன் போதை
என்னைப் பார்த்து சிரிக்க,
என் போதை
உன்னைப் பார்த்து சிரிக்க,
கொஞ்ச நேரத்தில்
ஊரே சிரிக்கும்
நம்மைப் பார்த்து.
-x-
சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி
இவர் சொன்னது முற்றிலும் உண்மையே... ஈழத்தமிழரிடம் ஒரு அனுதாபம் உள்ளதே தவிற, அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவில்லை. நம்ம ஊர் பக்கம் சென்றிருந்த போது, பிரபாகரன் ஆட்கள், இங்கிருந்து செல்லும் தமிழர்களுக்கு கொடுக்கும் தொந்தரவுகளைப் பற்றி சொன்னார் ஒரு நண்பர்; எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இந்த முடிவுகளை, ’வழக்கம்போல ஓட்டுப் போடாத’ குடிமகன்கள் எதிர்பார்க்கவில்லை.
அடுத்து, சூப்பர் ஸ்டார் மேல் இவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை; அவர் நல்லது செய்திருக்கிறாரோ இல்லையோ, யாருக்கும் கெட்டது செய்ததாகத் தெரியவில்லை.
நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன்.
-x-
0 ஊக்கங்கள்:
Post a Comment