1)
இதயத்தின் முதல் எதிரி கண்கள்தான்
ஏனென்றால்
இதையம் மறைத்து வைக்கும் எல்லாவற்றையும்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்
---
2)
பூக்களாக இருக்காதே
உதிர்ந்துவிடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்துக்கொண்டே இருப்பாய்.
---
3)
பைக் இருந்தா
ஓட்டத் தோனும்
டிவி இருந்தா
பாக்கத் தோனும்
பிரண்ட் இருந்தா
பேசத் தோனும்
ஆனா...
புக் இருந்தா
படிக்கத் தோனுமா?
-லாஸ்ட் பெஞ்ச் அசோசியேசன்.
---
4)
உன் கண்களில் இருந்து வரும்
கண்ணீர் கூட அழுகிறது
அழகான இடத்தை விட்டு
வருகிறோமே என்று.
---
5)
Today Girls
அப்பா:
சின்ன வயசுல என்ன அப்பானு கூப்டுவ... இப்போ டாடினு கூப்டுறியே?
மகள்:
அப்பானு கூப்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடும் டாடி.
---
6)
மௌனம்
இன்பமான நேரங்களில் மௌனம்
சம்மதம்
உண்மையான உறவுகள் பிரியும்போது மௌனம்
துன்பம்
காதலில் மௌனம்
சித்ரவதை
தோல்வியில் மௌனம்
பொறுமை
வெற்றியில் மௌனம்
அடக்கம்
இறுதியில் மௌனம்
மரணம்
---
7)
நீங்கள் சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உங்கள் பின்னால் இருப்பேன்
ஏன் தெரியுமா?
அந்த கொடுமைய யாரு முன்னால நின்னு பாக்குறது.
---
8)
World's shortest jokes:
1) Two women sitting quiet.
2) Chennai girls cooking lunch.
3) Girl friend pays the bill
4) A girl loves a boy sincerely.
---
9)
ஒரு சூரியனுக்குப் பக்கத்துல 9 சூரியன் இருந்தா என்ன ஆகும்?
ten'sun' ஆகும்.
நீங்க டென்சன் ஆவாதீங்க.
---
10)
எல்.கே.ஜி. பாய்ஸ் அரட்டை:
1:
ஒரு செம ஃபிகர், சுமார் ஒரு வயசு இருக்கும்.
அவங்க அம்மா மடில படுத்து வாய்ல வெரல வச்சுகிட்டு சிரிச்சா பாரு, அய்யோ...
2:
அப்புறம் என்ன ஆச்சு?
1:
நானும் பலூன்லாம் வச்சி செம சீன் போட்டேன் மச்சா,
கண்டுக்கவே மாட்டேனுட்டாடா,
ரெண்டு நாளா நா செரலாக் கூட சாப்பிடல தெரியுமா?...
2:
விடு மச்சா,
நாளைக்கு அவள தொட்டிலோட தூக்கிருவோம்டா.
---
15 ஊக்கங்கள்:
// 1:
நானும் பலூன்லாம் வச்சி செம சீன் போட்டேன் மச்சா,
கண்டுக்கவே மாட்டேனுட்டாடா,
ரெண்டு நாளா நா செரலாக் கூட சாப்பிடல தெரியுமா?...
2:
விடு மச்சா,
நாளைக்கு அவள தொட்டிலோட தூக்கிருவோம்டா.//
இது சுப்பரு அப்பு...!!!
//3)
பைக் இருந்தா
ஓட்டத் தோனும்
டிவி இருந்தா
பாக்கத் தோனும்
பிரண்ட் இருந்தா
பேசத் தோனும்
ஆனா...
புக் இருந்தா
படிக்கத் தோனுமா?
-லாஸ்ட் பெஞ்ச் அசோசியேசன்.//
அதெப்படி தோணும்?
எல்லாம் டாப்
எழில். ரா,
எவ்வளவோ மேட்டர் இருக்குது இங்க... குறிப்பா இதான் உங்களுக்கு பிடிச்சிருக்கா? இன்னும் யூத்தாவே இருக்கீங்களே...
திரும்பவும் ஆபீஸ் ரூம்ல கூப்டுற மாதிரி தெரியுது!
வசந்த்,
நன்றி.
அட நீங்க நம்ம ஜாதி (லாஸ்ட் பெஞ்ச்).
அருமை. வாழ்த்துகள்.
நண்பரே, இந்த ஹைலைட் பண்ணுவது எப்படி என்று சொல்லி தந்தால் மகிழ்வேன்.
வண்ணத்துபூச்சியார்,
நன்றி.
ஒரு சில விசயங்களை நான் சொல்லி நீங்களே செய்ய முடியும்.ஆனால், சில இதுபோன்ற சில விசயங்களின் செயல்முறை அந்தந்த டெம்ப்லேட்டுக்கு ஏற்ப மாறுபடும். சாட்டில் வாருங்கள். செய்துவிடலாம்.
நாம என்னிக்குமே யூத்துதானய்யா..! அதுல சந்தேகம் வேறயா?
ஹைய்யோ.. ஹைய்யோ!!
ஆளாளுக்கு ஆபீஸ் ரூமுக்கு அனுப்பிடுறாங்க.. முடியல!!!
பூக்களாக இருக்காதே
உதிர்ந்துவிடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்துக்கொண்டே இருப்பாய்.
__________________________________________________
நன்று
அனைத்துமே அருமை.
ஜோக்கெல்லாம் சூப்பரப்பு.
அதுவும்
//விடு மச்சா,
நாளைக்கு அவள தொட்டிலோட தூக்கிருவோம்டா//
டாப்பு டக்கர்....
:))))))
அடடா அத்தனையும் அசத்தல் வரிகள்
அருமையான மினிகவிதைத் தொகுப்பு.
பூக்களாக இருக்காதே
உதிர்ந்துவிடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்துக்கொண்டே இருப்பாய்
கவிதையாய் இருக்காதே மறக்கப் படுவாய் ,காகிதமாய் இரு ,அப்போதுதான் கவிதை எழுந்து கொண்டே இருக்கும்.
//எழில். ரா said...
நாம என்னிக்குமே யூத்துதானய்யா..! அதுல சந்தேகம் வேறயா?//
எல்லாரும் இப்படி சொன்னா எப்படி?
THANGA MANI,
நன்றி.
நன்றி...
துபாய் ராஜா said...
அதுவும்
//விடு மச்சா,
நாளைக்கு அவள தொட்டிலோட தூக்கிருவோம்டா//
டாப்பு டக்கர்....
நீங்களும் யூத்துதானோ?
goma,
நன்றி.
கவிதையாய் இருக்காதே மறக்கப் படுவாய் ,காகிதமாய் இரு ,அப்போதுதான் கவிதை எழுந்து கொண்டே இருக்கும்.
-அட, இதுகூட நல்லா இருக்கே!
காரை பின்னாலே தள்ளினா என்ன ஆகும்.
முன்னாலே போகும் .
இல்லை பின்னு வளைஞ்சு போகும்.
(ஏதோ சின்ன வயசு ஞாபகம் டரியலாகாதிங்க)
உங்களுக்கு மட்டும் எப்படி சிக்குது, கலக்குறிங்க.
Post a Comment