http://dondu.blogspot.com
http://pitchaipathiram.blogspot.com
என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள்... அதே போல
http://www.yetho.com
http://www.aathi-thamira.com
http://www.vvsangam.com
எனுமாறும் பார்க்கிறோம். இதேபோல OWN DOMAIN எனப்படும் உங்கள் விருப்பமான தனி டொமெய்னாக உங்கள் பிளாக்கர் தளத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் http://vanthuparu.blogspot.com என்பதை வைத்திருக்கிறீர்கள் எனவும் http://www.ingaparu.com என மாற்ற விரும்புகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.(http://vanthuparu.blogspot.com என்றால் கண்டிப்பாக http://www.vanthuparu.com என்றுதான் மாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை, இரண்டும் ஒன்றாகவும் இருக்கலாம், அல்லது வெவ்வேறாகவும் இருக்கலாம்)
முதலில், நீங்கள் விரும்பும் domain name உபயோகிக்காமல் இருக்கிறதா எனப் பார்த்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு பல தளங்கள் இருக்கின்றன. நேரடியாகச் சென்று கார்டு தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
(.com என்றால் வருடத்திற்கு 400 ம், .in என்றால் வருடத்திற்கு 700 ம் ஆகலாம், இதை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும், இந்தத் தொகை மாறுபடலாம்.) ஆனால் எனது பரிந்துரை, யாரேனும் வெண்டாரிடம் பதிவு செய்துகொள்வதே. சில நேரங்களில் இந்த டொமைன் செட்ட்ங்ஸ் சென்று ஏதேனும் மாற்ற வேண்டுமெனில் நீங்கள் சிறமப்பட வேண்டியிருக்கும்; வெண்டாரிடம் வாங்கியிருந்தீர்கள் எனில், அவரிடம் சொன்னால் போதும், அவரே தேவயானவற்றை செய்து கொடுப்பார்.
இப்போது நீங்கள் www.ingaparu.com என்பதைப் பதிவு செய்து விட்டீர்கள். அடுத்து
(படங்களை க்ளிக்கிப் பெரிதாக்கிக் கொள்ளவும்)
1. பிளாக்கரில் லாகின் செய்து, dashboard ல் இருந்து settings செல்லவும்.
2. Publishing பகுதிக்குச் செல்லவும்
3. Custom Domain ஐ க்ளிக்கவும்.
இப்போது இது போல பக்கம் தெரியும். இங்கேயே Domain பதிவு செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்தால் Domain Settings ல் நாம் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.
4. நீங்கள் ஏற்கனவே பதிவு செய்தபடியால் Switch To Advanced Settings ஐ க்ளிக்கவும்.
5. Your Domain ல் www.ingaparu.com என கொடுக்கவும்.
அதற்கு முன் அதன் கீழே உள்ள setup instructions பார்க்கவும். இங்கே உங்களுடைய Domain Settings ல் CNAME ரெக்கார்டு www க்கு ghs.google.com என உருவாக்குமாரு சொல்லப்பட்டிருக்கும். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களே செய்யலாம், இல்லையெனில் உங்கள் வெண்டாரிடம் செய்யச் சொல்லுங்கள். இங்கு வருவதற்கு முன்பே இதைச் செய்துவிடவும். (Domain பதிவதற்கு முன்பே இந்த வசதி இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும்)
6. இதை No என்றே விட்டுவிடலாம்.
7. இதை நிரப்பவும்.
8. SAVE SETTINGS க்ளிக்கவும்.
அவ்வளவுதான்.
9. மீண்டும் இங்கு வந்து பார்த்தால், வெற்றிகரமாக எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளலாம். இங்கே Redirect... என்ற கட்டத்தை செலக்ட் செய்திருக்குமாறு விட்டுவிடவும்.
10 . உங்களுடைய http://vanthuparu.blogspot.com க்கு செல்ல நினைத்தாலும், www.ingaparu.com க்கே வந்துவிடும். பழைய பதிவுகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.
(ஆனால், இதற்கு நேர்மாறாக, பிற்காலத்தில் www.ingaparu.com என்பதை விட்டுவிட்டால் http://vanthuparu.blogspot.com என்பதைத் தெரியாதவர்களை இழந்துவிட வாய்ப்புள்ளது)
தகவல்கள் இங்கிருந்தும் பெறப்பட்டது
13 ஊக்கங்கள்:
பயனுள்ள தகவல்
வெங்கடேஷ்
நல்லா எழுதி இருக்கிங்க. தொழில்நுட்ப ஜிகிடியெல்லாம் தெரியாத நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
உங்க புரொபைல்ல பிழைக்க தெரியாதவன்னு போட்டிருக்கிறது சரியாத்தான் இருக்கு. அவனவன் வெப்டிசைனர்னு சொல்லிக்கிட்டு இந்த வேலயத்தான் செய்துட்டு இருக்காங்களா? (உண்மையான, திறமையான வெப்டிசைனர்களை குறை சொல்லவில்லை). எனக்கு தெரிந்த சில டுபாக்கூர் டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் எனது வலைப்பூவை வலைதளமாக (அதே டெம்ப்ளேட்டில்) மாற்ற எவ்வளவு செலவாகும் என கேட்டேன். ஆனால் அதில் ஒருவர் என்னிடம் குறைந்தது 1500 முதல் 2000 செலவாகும் என்றார். இன்னொருவர் 3000 கேட்டார். ஒருவர் மட்டும் 1000 கேட்டார். நீங்க சொல்றத பாத்தா... 400 ரூபாயில முடிச்சிடலாம் போலிருக்கே...! ரொம்ப நன்றி நண்பரே...!
@லொல்லு சபா
1000, 2000 கேட்டால் ஒன்றும் தப்பில்லை. அது பற்றிய அறிதலுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியே அந்தப் பணம். அது அவரது தொழில் அல்லவா? எதுவுமே அந்தந்த தொழிலுக்கு வெளியே இருந்து பார்த்தால் இப்படித்தான் தெரியும்.
ஒரு சில இடங்களில் விசாரித்து, எது உங்களுக்கு ஒத்து வருகிறதோ அதைச் செய்வதே சரி என எனக்குப்படுகிறது.
இதைப் பற்றி விரிவாக அப்புறம் பேசலாம்...
தங்களது நட்பு வட்டம் பெருகட்டும். கருத்துக்களுக்கு நன்றி.
நன்றி திரட்டி.காம்
நன்றி ராஜா | KVR
இணைய தளம் தொடர்பாக தங்களுக்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கத் தயாராக உள்ளேன்.
ஏதும் தேவை எனில் தொடர்பு கொள்ளவும். முடிந்தவரை செய்கிறேன்.
அழைத்தமைக்கு நன்றி.
templates, gadgets ல் எல்லாம் அந்த அளவு நாட்டம் இல்லை.
//1000, 2000 கேட்டால் ஒன்றும் தப்பில்லை. அது பற்றிய அறிதலுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியே அந்தப் பணம். அது அவரது தொழில் அல்லவா? எதுவுமே அந்தந்த தொழிலுக்கு வெளியே இருந்து பார்த்தால் இப்படித்தான் தெரியும்.
மிகவும் சரி!!
இருப்பதை அதே விலையில் கொடுப்பதற்கு பெயர் வியாபாரம் இல்லை.சலுகை!!
நன்றி The Rebel,
அழகாகச் சொன்னீர்கள்.
தங்கள் பதிவு கண்டேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நான் தறோது உள்ள டெம்ப்லேட் -மற்றும் எந்த அமைப்பும் சற்றும் மாற்றாமல் தனி டொமைன் மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
1.அதற்கு நேரடியாக பிளாகர் மூலமே பணம் கட்டிச் செய்து விட முடியுமல்லவா.வெண்டார் என்பது புரியவில்லை.
2.தனி டொமைன் ஆகும்போது இப்பொதுள்ள விட்ஜெட்டுகளோட்டுப் பட்டைகள் தக்க வைக்கப்படுமா.
தாங்கள் எந்த சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கலாம் எனக் கூறியதாலிக் கடிதம்.
இதுதொடர்பாகத் தாங்கள் எனக்கு உதவ முடியுமா.உரிய ஊதியம் எதுவெனினும்கொடுத்து விடுகிறேன்.
டொமைன் பதிவு செய்து அதை பிலாக்கருக்கு பொருத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன.
1. தங்களுக்குத் தேவையான டொமைன் (உதாரணத்திற்கு masusila.com) available ஆக இருக்கும் பட்சத்தில் பிலாக்கரிலேயே நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். மற்ற setting குகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
2. இருந்தாலும் வெண்டார் என்பதைப் பற்றிச் சொல்கிறேன். வேறு யார் மூலமாவது டொமைனை பதிவு செய்தால், அவரைத்தான் வெண்டார் என்று குறிப்பிடுகிறேன். உதாரணத்திற்கு godaddy.com / net4.in ல் நீங்களே நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது என்னைப் போன்ற சேவை அளிக்கும் நபர்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம். இவர்களைத்தான் வெண்டார் என்று குறிப்பிட்டேன். இந்த முறையில், பிலாக்கரை டொமைனுக்கு மாற்றுவதற்கு சில வழிமுறைகளை நாமாகச் செய்ய வேண்டும்.
முதலில் சொன்ன முறையில் நீங்கள் யாரையும் சார்ந்திருக்கவேண்டியது இல்லை. நீங்களே வேலையை முடித்து விடலாம். தயக்கம் இருந்தால் என்னைப் போன்றவர்களிடம் சொல்லிச் செய்யலாம். அதில் கிடைக்கும் இன்னொரு வசதி என்னவென்றால், google apps எனப்படும் வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணத்திற்கு, அந்த டொமைனுக்கான இமெயில் ஐடி, அதாவது contact@masusila.com / susila@masulila.com போன்ற இமெயில் ஐடிகளை நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்திகொள்ள முடியும்.
அடுத்து, இவ்வாறு மாற்றுவதன் மூலம் தற்போதிருக்கும் பிலாக்கரின் பாதிப்புகள்:
1. தற்போது இருக்கும் தோற்றத்திற்கோ, விட்ஜெட்டுகளுக்கோ எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது.
2. masusila.blogspot.com என்று தங்களது தளத்தை அழைத்தாலும் masusila.com க்கு அழைத்துச் சென்றுவிடும்.
3. ஓட்டுப்பட்டைகள் சரியாக வேலை செய்யாது. தமிழ்மணத்தில் திரும்பவும் இந்த புதிய டொமைனைப் பதிவு செய்ய வேண்டும். இண்ட்லிக்குத் தேவையில்லை. ஆனால் இதற்கு முந்தைய பதிவுகளின் ஓட்டுகள் தெரியாது (அவை பழைய blogspot டொமைனில் இருந்ததால்).
[url=http://buyonlinelasixone.com/#8748]lasix without prescription[/url] - generic lasix , http://buyonlinelasixone.com/#15354 cheap generic lasix
Post a Comment