என்னையும் மதிச்சி.... கேள்வி பதில்

ஏதோ, எப்படியோ ஆரம்பிச்சிட்டேன்... ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள ஒருத்தர்கிட்ட போன்ல பேசிட்டேன், இன்னொருத்தர் என்னயும் மதிச்சி இந்த கேள்வி பதில் தொடருக்கு கூப்பிட்டுருக்காரு... ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நன்றி.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெயர்: பிரதாப் பெஸ்கி. பிரதாப் - தந்தையின் தேர்வு, பெஸ்கி - தாத்தா தைரியநாதன் என்பதின் இன்னொரு பெயர் (தைரியநாதன், ஜோசப் பெஸ்கி, வீரமாமுனிவர் - ஒருவரையே குறிக்கும்)
என் பெயர் எனக்குப் பிடிக்கும்.

எவனோ ஒருவன் - இது சும்மா.... ஒரு இதுக்காக.

2) கடைசியா அழுதது எப்போது?
நேற்று, ரயிலில் வரும்போது கதவருகே... பழைய ரயில் பயண ஞாபகம்.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?
அம்மா சமைத்த கோழி வகைகளுடன் சோறு.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கஷ்டம்தான்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
இந்த இரண்டில் கடல் (எப்பவும் விரும்புவது நதியில்)

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண்களில் ஆரம்பிப்பேன்... அவரது தோற்றத்தையும், செயலையும் பொருத்து கவனம் சிதறும். கடைசிவரை கண்களிலேயே நின்றுவிடுவதும் உண்டு.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
கல்யாணம் ஆனால் சொல்கிறேன்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படியெல்லாம் ஏதும் வருத்தம் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கரு நீலம் கீழே, மெது நீலம் மேலே.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வருவாய்.... (கேட்டுக்கொண்டிருக்கிறேன்)

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்

14) பிடித்த மணம்?
மல்லிகை

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
புதுச்சட்டை, இதுதான் இது எழுதுவதற்குக் காரணம், அதில் வேறு சிறப்பு ஏதும் இல்லை.

17) பிடித்த விளையாட்டு?
கூட்டமாக விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாம் பிடிக்கும்.

18) கண்ணாடி அணிபவரா?
ஆம்.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
போரடிக்காத படங்கள்

20) கடைசியாகப் பார்த்த படம்?
ஞாபகம் இல்லை.

21) பிடித்த பருவ காலம் எது?
மழை.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ஒன்றும் படிக்கவில்லை.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
படம் வைக்கும் பழக்கம் இல்லை. எப்போதும் கருப்பாகத்தான் வைத்திருப்பேன்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இதுவரை தொலைவாகச் சென்றது போல தோன்றவில்லை.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
தெரியாது. இல்லை என்று மட்டும் கண்டிப்பாக இருக்காது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னைச் சுற்றி இருக்கும் மக்கள்; அப்படி இருந்தும் நான்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
(சாத்தான்கள்) இயலாமையி(யா)ல் கோபம், பொய் பேச மறுப்பது.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இதுவரை அப்படி எதுவும் இல்லை.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வாழ்க்கை வழியே செல்லவே ஆசை.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
9 ன் பதில்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
வாழ்தல் இனிதென மகிழ்ந் தன்றும் இலமே, முனிவின் இன்னா தென்றலும் இலமே... (இதுதான் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும்)

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
அழைக்கிற அளவுக்கு இன்னும் யாரும் அமையல... சென்ஷிய கூப்பிடலாம்னா அவர் அல்ரெடி எழுதிட்டாரு, நமது டோண்டு மறுத்துட்டாரு. வேற யாரையுமே கூப்புடுற அளவுக்கு பழகலன்னே தோனுது...

அந்த மாதிரி யாராவது செட் ஆனா கமண்ட்ஸ்ல அப்டேட்டுறேன்.

Share/Bookmark

14 ஊக்கங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

தங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி

ப்ரியமுடன் வசந்த் said...

தங்கள் பதில்கள் ரத்தின சுருக்கம்

Beski said...

நன்றி வசந்த்..
--
நமக்கு அனுபவம் கம்மிதான்... அந்த அளவுக்கே பதில்களும் உள்ளன.

சென்ஷி said...

//அழைக்கிற அளவுக்கு இன்னும் யாரும் அமையல... சென்ஷிய கூப்பிடலாம்னா அவர் அல்ரெடி எழுதிட்டாரு, நமது டோண்டு மறுத்துட்டாரு. வேற யாரையுமே கூப்புடுற அளவுக்கு பழகலன்னே தோனுது...//

:)
அட இன்னும் நிறைய்ய பேரு வெயிட்டிங் பாஸ். உங்க நட்புக்காக. நீங்க முதல்ல வெளியில வாங்க!

Anbu said...

\\அழைக்கிற அளவுக்கு இன்னும் யாரும் அமையல... சென்ஷிய கூப்பிடலாம்னா அவர் அல்ரெடி எழுதிட்டாரு, நமது டோண்டு மறுத்துட்டாரு. வேற யாரையுமே கூப்புடுற அளவுக்கு பழகலன்னே தோனுது...\\

அப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா..நாங்க எல்லாம் இருக்கோம்ல...

பதில்கள் அருமை

Beski said...

சென்ஷி,
நன்றி... உங்கள மாதிரி இன்னும் நிறைய பேரு வேணும்.

Beski said...

அன்பு,
வாங்க வாங்க...
அன்பு தம்பி, அன்புத்தம்பியா இருப்பீங்களா?

Joe said...

எவனோ ஒருவன்,
ரொம்ப சுருக்கமா பதில்களை முடிச்சிட்டீங்களே?
(இதெல்லாம் ஒரு கேள்வி, இதுக்கு ஒரு பதில் வேற? அப்படின்னு கடுப்பில எழுதிட்டீங்களோ?)

Beski said...

நன்றி Joe,
அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே...
//நமக்கு அனுபவம் கம்மிதான்... அந்த அளவுக்கே பதில்களும் உள்ளன.//

//இதெல்லாம் ஒரு கேள்வி, இதுக்கு ஒரு பதில் வேற? அப்படின்னு கடுப்பில எழுதிட்டீங்களோ?//
என்னங்க நீங்க, இப்பவேவா அப்படியெல்லாம் நெனப்போம்?!

சகாதேவன் said...

//கூப்புடுற அளவுக்கு இன்னும் பழகலேனு தோணுது//
பழகலாம் வாங்கன்னு உங்க கேள்விக்கு பதில் எழுதியிருக்கிறேன். பாருங்க. மார்க் போடுங்க.
சகாதேவன்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பழகலாம்...

http://sinekithan.blogspot.com

Beski said...

தேடி வந்த நட்பு...
கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிருச்சு
http://vedivaal.blogspot.com/2009/06/blog-post_19.html

Beski said...

http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_21.html

அக்பர் 16 தான் பதில் அளித்துள்ளார்...
32 பதில்களையும் தர அன்புடன் அழைக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

கண்டிப்பா தொடர்கிறேன்
அழைப்புக்கு நன்றி