பிளாக்கருக்கு வயது 10...

பிளாக்கர் ஆரம்பித்து, வரும் ஆகஸ்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறதாம். (அதே நேரம் கூகுளுக்கு ஆகும் வயது 20).

பிளாக்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...
- ஒரு நிமிடத்திற்கு 270,000 வார்த்தைகள் பிளக்கரில் எழுதப்படுகின்றன.
- வாரத்திற்கு மில்லியன் மக்கள் தங்களது பதிவுகளை இடுகிறார்கள்
- அதிகமாக உபயோகிக்கும் நாடு யூ.எஸ்., அடுத்து பிரேசில், துருக்கி, கனடா, யூ.கே...
- பெரும்பாலான பிளாக்கர்களின் அபிமான விளையாட்டு: கால்பந்து.

விருப்பம் உள்ளவர்கள் பிளாக்கர் பற்றிய தங்களது அனுபவங்களைப் பதிவாகப் போட்டு இங்கே அளிக்கலாம்.

--

கூகுள் மொழிபெயர்ப்பில் இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழி: பெர்சியன்.

தமிழைத் தேடினேன் இன்னும் வரவில்லை. சீக்கிரம் வந்துவிடுமெனெ நினைக்கிறேன். ஏனெனில் ஹிந்தி இருக்கிறது.

--

இன்று கூகுள் புத்தகங்களில் புதிதாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கியமாக கீழே உள்ளதுபோல, புத்தகங்களின் பக்கங்களை உங்கள் வலைப்பூ பக்கங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.



மேலும் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்...
- புத்தகங்களினுள் இருக்கும் பக்கங்களில் தேடும் வசதி
- பக்கங்களை தம்னெய்ல்களாகப் பார்க்கும் வசதி
- வெறும் எழுத்துக்களாக மட்டும் பார்க்கும் வசதி
- பக்கங்களைப் புரட்டுவதற்கான பொத்தான்கள்

விபரமாகப் படிக்க இங்கே செல்லவும்.

--

Share/Bookmark

11 ஊக்கங்கள்:

dondu(#11168674346665545885) said...

சுவாரசியமான தகவல்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

மிகவும் அருமையான தகவல்கள்..!

என்றும் அன்புடன்,
எழில். ரா

Beski said...

நன்றி டோண்டு சார்.

நன்றி எழில்.

சென்ஷி said...

பல புதிய தகவல்கள்.. சுவாரசியமாய் இருக்கிறது..

:)))

Beski said...

வாங்க ஷென்ஷி...
இப்போது கூகுளை மட்டும் குறி வைத்துள்ளேன்.

நன்றி.

Suresh said...

ரொம்ப சுவாரஸியமா இருக்கு நல்ல தகவல்கள்

ஆபிரகாம் said...

10x

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

இன்ட்ரெஸ்டிங்..............

Beski said...

Suresh, ஆபிரகாம், ஷோபிகண்ணு...

தங்களது வருகைக்கும், எண்ணப்பகிர்விற்கும் நன்றிகள்.

அன்புடன் அருணா said...

Very useful info!!!

Beski said...

அன்புடன் அருணா,
அன்புடன் நன்றி.