சிவாதான் ஆரம்பித்தான்...
உனக்கு, நீ மொதல்ல பாத்த படம் ஞாபகம் இருக்கா?
எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து படம் பாத்துட்டுதான் இருக்கேன், மொத படம்லாம் ஞாபகம் இல்லயே.
எங்க ஊருல இருந்த பிரண்ட் ஒருத்தன் வீட்டுல படத்துக்கே விட மாட்டாங்க, வீட்டுல டிவி கூட கிடையாது, +1 வர அவன் படமே பாத்ததில்ல. கிறிஸ்டின் வீட்டுல இப்படித்தான் இருப்பாங்களோ?
அதெல்லாம் ஒன்னுமில்ல, அது அந்தந்த வீட்டுல இருக்குற ஆளுங்களப் பொறுத்தது.
அப்புறம் ஒரு வழியா +1 ல மொத மொதலா தியேட்டருக்கே போய் படம் பாத்துட்டான். அதுல இருந்து ஒரு மாதிரியாவே ஆய்ட்டான். அப்புறம், ஒரே படத்த நாலஞ்சு தடவ பாப்பான், ஒரே நளைக்கி ரெண்டுமூனு படம் பாப்பான். இப்படியே அலைய ஆரம்பிச்சிட்டான்.
அடப்பாவி.
இப்போ அவன் மெகா சீரியல் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கானாம்.
அதெல்லாம் ஓக்கே... அவன் மொதல்ல பாத்த படம் என்னன்னு சொல்லு.
ஜீன்ஸ்
இப்போ ரமேஷ் உள்ள வந்தான்
ஓ! மொத படமே ஷங்கர் படமா? அதான் டைரக்டர் ஆய்ட்டான். ஆமா, எந்திரன் அடுத்த வருசம் தான வருது?
ஆமா, அதுக்கு முன்னாடி சுல்தான் வந்துரும்.
இப்போ படம் எடுத்து முடிக்கிறதுக்கு முன்னாடி ஷங்கர் செத்துப் பொய்ட்டா என்ன சார் ஆகும்?
அதான் அசிஸ்டண்ட்ஸ் இருக்காங்கள்ல, அவங்க எடுத்து முடிச்சிருவாங்க.
ஓஹோ, அப்போ படம் நின்னு போகாதா?
ஆமா, இதே மாதிரி தாம் தூம்ல நடந்துச்சில, அப்புறம் அசிஸ்டண்ட் எடுத்து முடிச்சாங்க.
அப்போ அத டைரைக்ட் பண்ணி முடிச்சது அவங்க ஒய்ப் இல்லயா?
இல்ல, ஆனா இப்போ அவங்க புதுசா ஒரு படம் டைரைக்ட் பண்ண போறாங்களாம்.
அப்போ ரஜினி செத்துட்டார்னா என்ன ஆகும்?
அவ்ளோதான், அவருக்கு பதிலாப் போட இங்க யாரு இருக்காங்க? வேனும்னா அவர மாதிரி ஒருத்தர செட் பண்ணி எடுக்க வேண்டியதான்
பேசாம அவர சாகுற மாதிரி காட்டி, அப்புறம் வேற யாரயாவது போட்டு படத்த எடுக்க முடியாதா?
தியேட்டர் கிழிஞ்சது போ! வேற வெனயே வேணாம். பேசாம அவர் வெளினாடு போய்ற மாதிரி காட்டிறலாம்.
என்ன ஆனாலும் சன் டிவி விளம்பரப்படுத்தியே ஓட்டிருவாங்கள்ல?
ஆமாமா, இன்னைக்கி கூட உலகத் தொலைக்காட்ச்சியில் முதல் முறையாக மாசிலாமணி படப் பாடல்கள்ங்கிற ரேஞ்க்கு விளம்பரம் ஓடிட்டு இருந்தது...
அடப்பாவிகளா...
இது பெரிய மேட்டரா? இன்று இரவு 8 மணிக்கு சிவாஜி பட ட்ரெய்லர்னு போட்ட ஆளுங்களாச்சே.
ட்ரெய்லருக்கே ட்ரெய்லரா! தாங்க முடியலடா சாமி.
---
நேத்து பெங்களூர்ல இருந்து ஒரு மிஸ்டு கால், மீட்டிங்ல இருந்ததுனால எடுக்க முடியல... யார்டானு யோச்சிட்டே இருந்தேன்.
மச்சான் ஒருத்தர் சாட்ல வந்தார், ‘உங்க பிளாக் நல்லா இருக்கு, அத சொல்ல கால் பண்ணேன், நீங்க எடுக்கல’ நு சொன்னார். அய்யய்யோ, எடுக்காம வுட்டுட்டமேனு பீலிங் ஆயிப்போச்சி.
பிளாக்கர் - தனி டொமெய்ன் நேம் வைத்துக் கொள்வது எப்... இதப் பாத்து நானும் பண்ணிட்டேன், நீங்கதான் தூண்டுகோள்னாரு... இன்னைக்கித் தூக்கம் வராதுனு நெனக்கிறேன். 2007 லயே ஆரம்பித்த அவர் அப்படியே விட்டுட்டார், இப்போ டொமைன் நேம் செட் பண்ணி திரும்ப ஆரம்பிச்சிட்டார். வாழ்த்துக்கள் தமிழில் எழிலுக்கு.
---
அப்புறம் எனக்குத் தெரிஞ்சு இந்த மாதம் புதிதாய் வந்தவர்கள்..
http://abragam.blogspot.com/
http://yellorumyellamum.blogspot.com/
---
நான் மொத மொதலா எழுதின போது எதிர்பாக்காமலேயே பின்னூட்டம் போட்டு என்னைத் தூக்கி(தாக்கி) விட்ட மூனு பேரு:
முத்துலெட்சுமி/muthuletchumi
சென்ஷி
அதிஷா
அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உண்டு.
அப்புறம் நான் முதன் முதலில் பார்த்த ப்ளாக்குக்கு சொந்தக்காரர் dondu அவர்களையும் மறக்க முடியாது.
---
மொக்கை தொடரும்...
---
19 ஊக்கங்கள்:
நல்லா இருக்குங்க உங்க நடை..
இதுக்கெல்லாம் நீங்க தூங்காம போனா, என்ன ஆளுயா நீங்க? சந்தோஷத்துல தூங்குங்க..! :)
//அப்புறம் நான் முதன் முதலில் பார்த்த ப்ளாக்குக்கு சொந்தக்காரர் dondu அவர்களையும் மறக்க முடியாது.//
இதை ரெண்டு விதமா அர்த்தம் பண்ணீக்கலாம்.
நீங்க முதலில் பார்த்ததா சொல்லறது பிளாக்கையா அல்லது அதன் சொந்தக்காரரையா?
எது எப்படியானாலும் பதிவு நல்லா இருக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி குறை ஒன்றும் இல்லை
நன்றி எழில். ரா
ஓக்கே ஓக்கே...
நன்றி dondu
ப்ளாக்குக்கு சொந்தக்காரரை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன் என நினைக்கிறேன்.
பதிவு நல்லாருக்கா? அப்போ இன்னும் மொக்க போடலாம்....
:-))
:-)))))
நன்றி Anbu
நன்றி சென்ஷி
இந்த மாதம் வந்த இன்னொருவர்...
http://sinekithan.blogspot.com/
இதோ இன்னொருவர்...
http://tamilmuthirai.blogspot.com/
http://gramathan.blogspot.com/
http://dpraveen03.blogspot.com/
http://jaganathank.blogspot.com/
http://wimpystar.blogspot.com/
http://idhyamonline.blogspot.com/
http://karthikpathivugal.blogspot.com
http://naanpithan.blogspot.com/
http://thisaikaati.blogspot.com/
[url=http://directlenderloandirectly.com/#ilcyn]direct lender payday loans[/url] - direct lender payday loans , http://directlenderloandirectly.com/#srjir direct lender payday loans
Post a Comment